மூன்றாம் உலகப்போர் நிச்சயம் நடந்திருக்கும் என பகீர் தகவல்! லண்டனில் பல முடிச்சுகளை களைத்த டிரம்ப்!

0

மூன்றாம் உலகப்போர் நிச்சயம் நடந்திருக்கும் என பகீர் தகவல்! லண்டனில் பல முடிச்சுகளை களைத்த டிரம்ப்!

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் லண்டனில் நடைபெற்ற நோட்டோ மாநாட்டின் செய்தியாளர்கள் சந்திப்பின் போது, நான் மட்டும் இல்லை என்றால் மூன்றாம் உலகப்போர் மத்தியில் இருந்திருப்போம் என்று கூறியுள்ளார்.

லண்டனின் Watford நகரில் நேட்டோ 31-வது உச்சி மாநாடு நடைபெற்று வருகிறது. இம்மாநாட்டில் இந்தியா உள்ளிட்ட 29 நாடுகளைச் சேர்ந்த உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இரண்டாம் உலகப்போரை அடுத்து 1949-ல் கையெழுத்தான் இந்த நேட்டோ ஒப்பந்தம் வெற்றிகரமாக 70 ஆண்டை நிறைவு செய்துள்ளது.

சமீப காலமாக, நேட்டோ நாடுகளுக்கு இடையே எழுந்து வரும் உட்பூசல்களுக்கு இந்த மாநாடு முற்றுப்புள்ளியாக இருக்கும் என்று கூறபட்டது. இதன் காரணமாகவே அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் வருகை மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில் திங்கட்கிழமை மாலை லண்டன் வந்தடைந்த டிரம்ப்பின் ஒவ்வொரு நடவடிக்கையும் உலகத் தலைவர்களால் உற்று நோக்கப்பட்டு வருகிறது.

நேட்டோ ஒப்பந்தத்தின் படி, உறுப்பினரான ஒருநாடு எந்த நாட்டின் மீது போர் தொடுத்தாலும் மற்ற அனைவரும் அவருக்கு உறுதுணையாக போர் உதவி செய்ய வேண்டும். இது தான் பெரும் தலைவலிக்கும் வழிவகுத்துள்ளது.

அமெரிக்காவின் தன்னிச்சையான செயல், அதாவது சிரியாவில் அமெரிக்கப் படைகள் பின்வாங்குவதற்கு முன் நேட்டோவை அணுகாததால், நேட்டோ அமைப்பு மூளைச்சாவு” அடைந்துவிட்டது என பிரான்ஸ் ஜனாதிபதி Emmanuel Macron குற்றம்சாட்டினார்.

மேலும் டிரம்ப் இரண்டாவது முறை ஆட்சியைப் பிடித்தால், இந்த அமைப்பு முழுவதுமாகக் கலைந்துவிடும் என்று ஜனநாயகக் கட்சி வேட்பாளர் Joe Biden எச்சரித்துள்ளார். 29 நாடுகளை உறுப்பினர்களாகக் கொண்ட இந்த அமைப்பில் சில நாடுகள் மட்டுமே பாதுகாப்பிற்காக மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2 சதவீதம் பணத்தை அளித்துள்ளனர் போன்ற பல விவாதங்களுடன் இந்த அமைப்பு கூடியது.

இதையடுத்து இந்த மாநாட்டின் முதல் நாளான நேற்று டிரம்ப் செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது, அவர் பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மேக்ரானின் குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கையில், சாதரணமாக உங்களால் அப்படிச் சொல்லிவிட முடியாது. எங்கள் எல்லோரையும் விட பிரான்ஸிற்குத்தான் நேட்டோ அவசியம் தேவைப்படுகிறது.

உண்மையில் அமெரிக்காதான் நேட்டோவால் குறைந்த லாபம் அடையும் நாடு, அமெரிக்க நிறுவனங்களுக்கு டிஜிட்டல் வரி மூலம் பாரம் சுமத்தியுள்ள பிரான்ஸ் மேலவைக் குறித்து பேசும்போது, அமெரிக்க நிறுவனங்கள் மீது யாரும் தங்களுடைய ஆதிக்கத்தைச் செலுத்த முடியாது. பிரான்ஸ் பொருள்கள் மீதான வரியும் உயர்த்தப்பட்டுள்ளது. அமெரிக்கா மீது அமெரிக்கர்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்துவோம் என்று கூறினார்.

பிரட்டனின் பொதுத் தேர்தல் பற்றிக் குறிப்பிடுகையில், இதில் யார் ஆட்சிக்கு வந்தாலும், அமெரிக்காவிற்கு ஒன்றும் ஆகிவிடப் போவதில்லை என்று கூறிய அவர், நேட்டோ நிச்சயம் ரஷ்யாவுடன் ஆயுதக் கட்டுப்பாடு குறித்து பேச வேண்டும்.

வட கொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன் உடனான தொடர்பு நல்ல நிலையில் நீடித்து வருகிறது. அவர் நிச்சயம் அணு ஆய்வு ஒப்பந்தத்தை மனதில் வைத்திருப்பார். நான் மட்டும் அமெரிக்க ஜனாதிபதியாக இல்லை என்றால் நிச்சயம் நாம் அனைவரும் மூன்றாம் உலகப் போரின் மத்தியில்தான் இருந்திருப்போம் என்று கூறி முடித்தார்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleபாகிஸ்தான் ‘ஒயிட் வாஷ்! சுழலில் சுருட்டிய லாயன்! சொந்த மண்ணில் பட்டையை கிளப்பிய அவுஸ்திரேலியா!
Next articleமுற்றும் இரு நாடுகளுக்கிடையிலான பிரச்சினை! இலங்கையை விட்டு வெளியேற சுவிஸ் தூதரக ஊழியருக்கு தடை!