மூக்கின் மேல் ஒரு கண் வைங்க ! சைனஸ் பிரச்சினையில் இருந்து முற்றிலுமாக விடுபட சிகிச்சை முறைகள் !

0

மூக்கின் மேல் ஒரு கண் வைங்க !

1.பல்லில் உண்டாகும் சொத்தைக்கும், சைனஸ் தொந்தரவுக்கும் சம்பந்தம் இருக்கிறது. இரண்டையும் இணைத்து வைப்பது அவற்றின் இருப்பிட அமைப்பு தான். பற்களின் வேருக்கு மிக அருகில்தான் மாக்ஸிலரி சைனஸ் அறைகள் இருக்கின்றன. பல்லில் உண்டாகும் சொத்தை மேலும் வளரும் பட்சத்தில் அது பல்லின் வேர்வரை புரையோடி, அருகில் இருக்கும் மாக்ஸிலரி சைனஸ் அறையும் தொட்டுவிட வாய்ப்பு இருக்கிறது.

2.அப்போது இந்த சைனஸ் அறையிலும் பாதிப்பு பரவி உள்ளே சீழ் தேங்க ஆரம்பித்துவிடும். இதன் தொடர்ச்சியாக டர்பினேட்டுகளில் வீக்கம் உண்டாகி அது சைனஸ் அறைகளின் வாசலை அடைத்து விடும். பல் சொத்தையால் சைனஸ் பிரச்சினை வருவது இப்படித்தான். பல்சொத்தை மட்டுமல்ல, ஏதோ காரணத்துக்காக பல்லை பிடுங்கும்போதும் உஷாராக இருக்க வேண்டும் இல்லையென்றாலும் கஷ்டம்தான்.

3.பிடுங்கப்படும் பல்லின் ஆணிவேர் கையோடு வரும்போது, அது எந்த வகையிலும் சைனஸ் அறையை பாதித்து விடக்கூடாது. விபத்துக்களின்போதோ அல்லது வேறு ஏதாவது சந்தர்ப்பங்களிலோ கன்னத்தை குறி வைக்கும் எதிர்பாராத தாக்குதல்கள் கூட இந்த மாக்ஸிலரி சைனஸ் அறைகளை சேதப்படுத்தி, சைனஸ் தொந்தரவை கொண்டுவரும் வாய்ப்பு இருக்கிறது.

4.சைனஸ் பிரச்சினையில் இருந்து முற்றிலுமாக விடுபட சிகிச்சை முறைகள் இருக்கிறது. சைனஸ் பிரச்சினையை நாங்கள் இண்டு வகையாக எடுத்துக்கொள்கிறோம். ஒன்று திடீர் திடீரென்று வந்து போகும், தீவிரமான வலியைத் தரும் சைனஸ். இன்னொன்று நிரந்தரமான ஆனால் குறைவான வலியைத் தரக்கூடிய சைனஸ். முதல் வகையை சொட்டு மருந்துகளாலும் நோய் எதிர்ப்பு மாத்திரைகளாலும் எளிதாகவே குணப்படுத்தி விடலாம்.

5.மிகச் சில பேருக்கு மட்டுமே அறுவை சிகிச்சை வரை போக வேண்டியதிருக்கும். ஆனால் சைனஸ் பிரச்சினையை பொருட்படுத்தாமல் விடுவதால் வரும் இந்த இரண்டாவது வகையை என்ன மருந்து கொடுத்தாலும் முழுமையாக குணப்படுத்திவிட முடியாது. வலியை வேண்டுமானால் கட்டுப்படுத்த இயலும்.

6.பாதிக்கப்பட்ட அத்தனை திசுக்களையும் நீக்கினால் தான் முழு நிவாரணம் கிடைக்கும் என்ற நிலை டர்பனேட் ஜவ்வுகளையும் வளரவிட வேண்டும். ஆனால் இதெல்லாம் சாதாரண காரியமில்லை. இப்போது இதற்கும் முற்றுப்புள்ளி வைக்கும் அளவுக்கு மருத்துவத் துறையில் நவீன சிகிச்சை முறைகள் வந்து விட்டன.

7.பாதிக்கப்பட்ட திசுக்களை நீக்க வேண்டிய அவசியமே இல்லாமல் நவீன அறுவை சிகிச்சை முறையில் அதைக் குணப்படுத்த முடிகிறது. குணப்படுத்த முடியாத சைனஸ் என்று எதுவும் இல்லை என்பதுதான் இப்போதைய நிலை. முன்பெல்லாம் சைனஸ் பிரச்சினை என்றால் சைனஸ் அறையை ஓட்டை போடுவதுதான் எளிய வழியாக இருந்தது.

8.மூக்குக்கு உள்ளே சிரிஞ்ச் வாயிலாக நீரை பீய்ச்சி அடித்தால் அதுவே சைனஸ் அறைகளில் ஓட்டையை உண்டாக்கிவிடும். உள்ளே தேங்கிக் கிடக்கும் சீழ், அந்த ஓட்டை வழியாக வெளியே வந்துவிடும். காலப்போக்கில் இந்த ஓட்டை தானாகவே குணமாகி, நிரப்பப்பட்டு விடும் என்றாலும் இதில் ஒரு பெரிய சிக்கல் இருந்தது.

9.அடுத்து எப்போது வேண்டுமானாலும் சைனஸ் வரலாம் என்பது ஒருபுறமிருக்க அப்படி வந்தால் மறுபடியும் ஓட்டை போட்டுதான் அதை வெளியே எடுக்க வேண்டும் என்பதுதான் அந்த சிக்கல். இப்போது இந்த சிக்கலுக்கும் தீர்வு கண்டாகி விட்டது. மூடப்பட்ட கதவை திறந்தாலே உள்ளேயிருக்கும் சீழ் வெளியேறிவிடும் அல்லவா?

10.அந்த கதவை சரியான அளவில் சரியான அளவில் திறந்து வைப்பதுதான் இப்போதைய சிகிச்சை முறை. சி.டி. ஸ்கேன், எம்.ஆர்.ஐ. ஸ்கேன் என்ற நவீன வசதிகளால் எந்த சைனஸ் அறை பாதிக்கப்பட்டிருக்கிறது. எவ்வளவு பாதிக்கப்பட்டிருக்குது, அவற்றில் இருப்பது சளிதானா அல்லது சீழா? என்பதையெல்லாம் மிகத் துல்லியமாக கண்டறிய முடிகிறது. இதனால் அறுவை சிகிச்சையும் எளிதாகி விட்டது.

11.சைனஸ் அறையில் செய்யப்படும் அறுசை சிகிச்சைக்கு மூக்கின் வெளிப்புறத்தில் ஏதாவது ஓட்டை போட வேண்டியிருக்குமா? அது தழும்புகளை உண்டாகும் அளவுக்கு இருக்குமா? அதற்கெல்லாம் அவசியமே இல்லை. அறுவை சிகிச்சை கருவிகளை கையாள மூக்குக்கு உள்ளேயே போதுமான அளவுக்கு இடம் இருக்கிறது.

12.அப்படியில்லை என்றால் வாய்வழியாக கூட சைனஸ் அறைகளை அடைந்து அறுவை சிகிச்சை மேற்கொள்ளலாம். எத்மாய்டு அல்லது பிரண்ட்ஸ் சைனஸ் அறைகளில் பாதிப்பு ஏற்படுபவர்களுக்கு மட்டுமே. தேவைப்படும் பட்சத்தில் மூக்குக்கு வெளியே லேசாக கிழிக்க வேண்டியிருக்கும். அப்படியே கிழித்தாலும் அதன் தழும்பு தெளிவாக தெரியாத அளவுக்கு மிகமிக சிறியதாக இருக்கும். கவலையே வேண்டாம்.

13.சைனஸ் பிரச்சினையை கண்டுகொள்ளாமல் விட்டால் விபரீதமாகிவிடும் என்று சொல்லியிருக்கிறீர்கள் டாக்டர். அப்படியென்ன விபரீதங்கள் நேரும்?

14.கண்பார்வை குறைபாடுகள்தான் முதலும் முக்கியமான விபரீதம். இந்த சைனஸ் அறைகளுக்கு மிக அருகில்தான் கண்கள் இருக்கின்றன. என்பதால் அறைகள் பாதிப்புக்குள்ளாகும் பட்சத்தில் அது கண்களையும் பாதிக்கலாம். இப்படி ஒரு கண்ணின் பார்வையை பறிகொடுத்த நோயாளியை சமீபத்தில்கூட சந்தித்தேன்.

15.சைனஸ்தானே அது போய் என்ன பண்ணிடும் என்று அலட்சியமாக இருந்துட்டேன் டாக்டர் என்று கதறினார் அவர். சிலருக்கு கண்பார்வையை சுற்றி சீழ்பிடித்து இரண்டு கண்களுக்கும் இடையேயான ஒருங்கிசைவு பாதிக்கப்பட்டு இரட்டை பார்வை சிக்கல் நேரலாம். இது கொஞ்சம் விபரீதமானதுதான். ஒவ்வொரு கண்ணுக்கும் ஒரு இமேஜ் தெரிந்தால் குழப்பம் ஏற்பட்டு அதனால் உண்டாகும் மனஉளைச்சலை வார்த்தைகளால் விவரிக்க முடியாது.

16.பிரன்டல் சைனஸ் அறைகளும் எத்மாய்டு சைனஸ் அறைகளும் மூளைக்கு மிக அருகாமையில் அமைந்திருக்கின்றன. இவற்றில் ஏதாவது பாதிப்பு என்றாலும் அது மூளை வரை பரவி மூளைக் காய்ச்சல் வரலாம். அது மட்டுமல்ல… உயிருக்கே கூட அது ஆபத்தை உண்டாக்கலாம். மூக்கு என்பது சுவாசிப்பது, வாசனையை அறிவது போன்ற விஷயங்களுக்கு மட்டுமே உதவக்கூடிய உறுப்பு அல்ல. மருத்துவ சிகிச்சை முறைகளில் அதற்கு மகத்தான ஓர் இடம் இருக்கிறது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleதேனை எதற்கெல்லாம் பயன்படுத்தலாம் தெரியுமா? நெல்லிக்காய் சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் இன்சுலின் சுரக்கும் !
Next articleமுடி உதிர்வதைத் தடுக்க வேண்டுமா? முடி இல்லாமல் வழுக்கையாக இருப்பவர்களுக்கு ஒரு குறிப்பு !