முழங்கால்கள் கருப்பாக உள்ளதா? இவற்றை ட்ரை பண்ணி பாருங்க!

0

பொதுவாக சில பெண்களுக்கு முழங்கால் மற்றும் முழங்கைகளில் கருமையடைந்து காணப்படும்.

இதற்காக கடைகளில் விற்கப்படும் கிரிம்களை பயன்படுத்தி சிலர் தற்காலிகமாக அந்த கருமையை போக்குவதுண்டும். இதனை தவிர்த்து வீட்டிலே கிடைக்கும் பொருட்களை கொண்டு கருமையை எளிதாக முற்றிலும் போக்க முடியும். அவை என்ன என்பதை பார்ப்போம்.

1 டேபிள் ஸ்பூன் பேக்கிங் சோடாவில் சிறிது பால் சேர்த்து பேஸ்ட் செய்து, அதனை முழங்கால் மற்றும் முழங்கைகளில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்து வந்தால், கருமையைப் போக்கலாம்.

மஞ்சள் தூளில் சிறிது பால் மற்றும் தேன் சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து, அதனை கருமையாக உள்ள இடங்களில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, பின் ஈரமான கையால் அவ்விடத்தை 2 நிமிடம் மசாஜ் செய்து, குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.

ஆலிவ் ஆயில் மற்றும் சர்க்கரையை சரிசமமாக எடுத்து பேஸ்ட் செய்து, முழங்கால் மற்றும் முழங்கைகளில் தடவி 5 நிமிடங்கள் மசாஜ் செய்து, மைல்டு சோப்பு பயன்படுத்தி கழுவினால், கருமையானது நீங்கும்.

1 எலுமிச்சையை சாறு எடுத்துக் கொண்டு, அதில் 1 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து கலந்து, அந்த கலவையை கருமையாக உள்ள இடத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து பின் கழுவினால், கருமை கொஞ்சம் கொஞ்சமாக மறைய ஆரம்பிக்கும்.

கடலை மாவில் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து, முழங்கால் மற்றும் முழங்கைகளில் தடவி வட்ட வடிவில் மசாஜ் செய்து, உலர வைத்து, கழுவ வேண்டும். இப்படி தொடர்ந்து செய்து வந்தால், நல்ல மாற்றம் தெரியும்.

ஆலிவ் ஆயிலை வெதுவெதுப்பாக சூடேற்றி, தினமும் இரவில் படுக்கும் போது முழங்கால் மற்றும் முழங்கைகளில் தடவி 10 நிமிடம் மசாஜ் செய்து வந்தால், நாளடைவில் கருமை மறையும்.
கற்றாழை ஜெல்லை முழங்கால் மற்றும் முழங்கைகளில் தடவி 1/2 மணிநேரம் ஊற வைத்து வந்தால், கருமை மறையும்.

தினமும் தக்காளியின் சாற்றினை கருமையாக உள்ள இடங்களில் தடவி 1/2 மணிநேரம் ஊற வைத்து கழுவி வந்தால், கருமை நீங்கும்.

வினிகர் மற்றும் தயிரை ஒன்றாக ஒரு பௌலில் கலந்து, முழங்கைகால் பகுதியில் தடவி நன்கு உலர வைத்து, பின் அதனை இடத்தில் சிறிது நீர் தெளித்து 2 நிமிடம் மசாஜ் செய்து கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், நல்ல மாற்றத்தைக் காணலாம்.

திராட்சையின் சாற்றினை முழங்கால் மற்றும் முழங்கைகளில் தடவி நன்கு தேய்த்து, உலர வைத்து கழுவ வேண்டும். இப்படி தொடர்ந்து செய்து வந்தால் கருமை மறையும்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous article4 சொட்டு நல்லெண்ணெயை சிறுநீரில் விட்டால் போதும்: இந்த மாற்றம் வந்தால்..?
Next articleஉயிர் போகும் தலைவலியா? வாழைப்பழ தோல் மட்டும் போதுமே!