Home Jaffna News முல்லைத்தீவில் சடலமாக மீட்கப்பட்ட 16 வயது சிறுமி!

முல்லைத்தீவில் சடலமாக மீட்கப்பட்ட 16 வயது சிறுமி!

0
486

முல்லைத்தீவு – ஒட்டுச்சுட்டான், தொட்டியடிப்பகுதியில் 16 வயதான சிறுமி ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் நேற்று மாலை வேளையில் இடம்பெற்றுள்ளது.

தொட்டியடிப்பகுதியைச் சேர்ந்த குறித்த சிறுமி தனது வீட்டின் பின்புறத்தில் உள்ள மரம் ஒன்றில் தூக்கில் தொங்கி உயிரிழந்த நிலையில் காணப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் பிரதேசவாசிகள் ஒட்டுச்சுட்டான் பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் சிறுமியின் மரணம் குறித்து விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.

மேலும், சிறுமியின் சடலம் பிரேத பரிசோதனைக்காக முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous article25 நாட்களில் கசந்த இல்லற வாழ்க்கை மனைவியை கதற கதற கழுத்தறுத்து கொன்ற கணவன் எதற்கு தெரியுமா?
Next articleகள்ளகாதலுக்காக சகோதரன் உட்பட 4 பேரை போட்டுத்தள்ளிய பெண்!