முரு‌ங்கை‌யி‌ன் மரு‌த்துவ குண‌ம்-இய‌ற்கை வைத்தியம்!

0
512

இய‌ற்கை வைத்தியம் முரு‌ங்கை‌யி‌ன் மரு‌த்துவ குண‌ம் முருங்கைப்பூ ஒரு கைப்பிடி அளவு எடுத்து சுத்தப் படுத்தி, அதை 250 மில்லி பசும்பாலில் கொதிக்க வைத்து, அதனுடன் கற்கண்டு கூட்டி, ஒரு மண்டலம் குடித்து வர ஆண்மை பெருகும். முருங்கை வேரை நீர் விடாமல் நன்கு அரைத்து, பசும்பாலில் கலந்து காய்ச்சி, 2 வேளை குடித்து வரவும் அவ்வாறு செய்துவர 4 நாட்களில் ‘ஹிஸ்டிரியா’ எனப்படும் மனச்சிதைவு நோய் கட்டுப்படும்.

முருங்கைப் பூவுடன் சமளவு துவரம்பருப்பு சேர்த்து சமைத்து சாதத்துடன் கலந்து பகலில் சாப்பிட்டு வர, உடலில் வலு ஏற்படும். ரத்தம் அதிகரிக்கும். பெருப்பாடு குணமாகும். முருங்கைக் கீரையில் வைட்டமின் ஏ,பி, சி, புரதம், இரும்புச்சத்து, சுண்ணாம்புச் சத்து உள்ளது. ‘வெந்து கெட்டது முருங்கை’ என்பது பழமொழி. எனவே இதை அதிகம் வேகவிடாமல், பக்குவத்துடன் சமைக்க வேண்டும்.

Previous articleமுகப்பருவால் ஏற்படும் தழும்புகள் மாற அழகிய குறிப்பு!
Next articleபொடுகுத் தொல்லையும் அரிப்பையும் எரிச்சலையும் போக்குவதற்கான வைத்தியம்!