முட்டை குறித்து ட்விட்டரில் விவாதத்தை கிளப்பிய ஆய்வு!

0
440

ஆரோக்கியத்திற்கு முட்டை நல்லதா அல்லது கெட்டதா? என்ற குழப்பத்திற்கு காரணம் ஜேஏஎம்ஏ பத்திரிகையில் வெளியிடப்பட்ட ஒரு புதிய ஆய்வின் தகவல்தான்.

அதாவது, பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தியில், நாளொன்றுக்கு கூடுதலாக முட்டை உட்கொள்வதால் இதய நோய்கள் ஏற்படுவதற்கான அபாயம் உள்ளதாகவும், இறப்புக்கான ஆபத்து அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

ஆய்வில் 29,615 வயது வந்தோரிடமிருந்து தரவுகளைப் பெற்று இந்த ஆய்வு முடிவுகள் எடுக்கப்பட்டன. ஒவ்வொரு நாளும் 300மி.கி கொழுப்பினை உட்கொள்வதால் இதய நோய்களின் ஆபத்து அதிகரிக்ககூடும் என்று ஆய்வு தெரிவித்துள்ளது.

மேலும் இந்த ஆய்வு, “கொழுப்பு மனித உணவுகளில் ஒரு பொதுவான ஊட்டச்சத்து. முட்டை கொழுப்புச் சத்தின் முக்கிய ஆதாரமாக இருக்கிறது.

ஆய்வுக்கான தரவுகள் மார்ச் 25, 1985 மற்றும் ஆகஸ்ட் 31, 2016 வரை சேகரிக்கப்பட்டவையாகும்.

இந்த ஆய்வு முட்டையை விரும்பி சாப்பிடுவோர் மத்தியில் பெரும் குழப்பத்தை உருவாக்கி உள்ளது. ஒருவர் ஒருநாளைக்கு அல்லது ஒரு வாரத்திற்கு எத்தனை முட்டைகள் சாப்பிடுவது ஆரோக்கியமானது என்பது போன்ற கேள்விகளை எழுப்பியுள்ளது. இதற்கு முன் பல ஆய்வுகள் தினசரி முட்டை சாப்பிடுவதால் இரத்த அழுத்தம் மற்றும் உடல் எடையை கட்டுப்படுத்துவதாக தெரிவித்துள்ள நிலையில், இந்த ஆய்வு குறித்து ட்விட்டரில் எழுந்த சில பதில்களும் வழங்கப்பட்டுள்ளது.

இந்த ஆய்வினை மேற்கொண்ட ஆய்வாளர் ஒருவர் இது குறித்து தெரிவிக்கையில், முட்டைகளை முற்றிலுமாக சாப்பிடுவதை நிறுத்த வேண்டும் என்று சொல்லவில்லை எனத் தெரிவித்தார். கொழுப்பு அதிகமுள்ள உணவுகளை எடுத்துக் கொள்ளும் போது இறப்பு மற்றும் இதய நோய்களுக்கு ஆபத்து அதிகமாகும் என கூறியுள்ளார்.

Previous articleதாங்கமுடியாத தலைவலியை போக்க வேண்டுமா! இதோ எளிய நிவாரணம்!
Next articleஇந்த இலைகளை கொதிக்க வைத்து பயன்படுத்தவும்! நன்மைகள் ஏராளம்!