பலரும் சந்திக்கும் ஓர் பெரும் பிரச்சனை தான் தலைமுடி உதிர்ந்து வழுக்கையாவது. அதிர்ஷ்டவசமாக, தலைமுடி உதிர்வைத் தடுக்க ஏராளமான இயற்கை வழிகள் உள்ளன. குறிப்பாக சொட்டையான இடத்தில் முடி வளர கீழே கொடுக்கப்பட்டுள்ள ஒரு பழங்கால முறை பெரிதும் உதவியாக இருக்கும்.
மேலும் இந்த முறையை ஆண்கள், பெண்கள் என இருபாலரும் பயன்படுத்தலாம். சரி, இப்போது வழுக்கைத் தலையில் முடியை வளரச் செய்யும் அந்த இயற்கை வழி என்னவென்று காண்போமா…!
தேவையான பொருட்கள்: * ஆலிவ் ஆயில் * பட்டை பொடி * தேன்
செய்முறை #1 முதலில் ஒரு பாத்திரத்தில் ஆலிவ் ஆயிலை சிறிது ஊற்றி சூடேற்றி இறக்க வேண்டும்.
செய்முறை #2 பின்பு அதில் பட்டை பொடி மற்றும் தேன் சேர்த்து நன்கு கலந்து குளிர வைக்க வேண்டும்.
செய்முறை #3 அடுத்து தயாரித்து வைத்துள்ள பேஸ்ட்டை ஸ்கால்ப்பில் படும்படி நன்கு மசாஜ் செய்து, 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
செய்முறை #4 பின் மைல்டு ஷாம்பு அல்லது சீகைக்காய் போட்டு, தலைமுடியை நன்கு அலச வேண்டும்.
நன்மைகள் இந்த செயலைப் பின்பற்றிய சில நாட்களிலேயே, ஓர் நல்ல மாற்றத்தைக் காணலாம். அதுவும் தலைமுடி உதிர்வது நின்று, மயிர்கால்கள் நன்கு வலிமையடைந்து இருப்பதைக் காண்பீர்கள். அதோடு, சில நாட்களின் பயன்பாட்டிற்குப் பின், வழுக்கைத் தலையிலும் முடி வளர ஆரம்பிப்பதைக் காணலாம்.