முக அழகை பேணிக் காக்க சில டிப்ஸ்!

0
526

உங்கள் முக அழகை பேணிக் காக்க அதுவும் நீங்களே தயாரித்துக்கொள்ள உங்களுக்காக சில டிப்ஸ்.. நன்னாரி – 10 கிராம் ரோஜா இதழ் காய்ந்தது – 10 கிராம் வெந்தயம் (வறுத்த பொடி) – 2 தேக்கரண்டி சந்தனத் தூள் – 2 தேக்கரண்டி செஞ்சந்தனம் – 10 கிராம் காய்ந்த எலுமிச்சை தோல் – 10 கிராம் எடுத்து நீர் விட்டு இரவு முழுவதும் ஊறவைத்து மறுநாள் காலையில் அரைத்து அதனுடன், முட்டையின் வெள்ளைக்கருவை கலந்து நன்றாக குழைத்து முகத்தில் நன்கு பூசி 15 நிமிடங்கள் கழித்து முகத்தைக் கழுவினால், முக வறட்சி, முகப்பரு, கண்களின் கீழ் தோன்றும் கருவளையம் போன்றவை நீங்கி முகம் பளிச்சிடும்.

மேலும் இந்த கலவையை கழுத்தில் பூசி வர கழுத்தில் நகை அணிவதால் உண்டாகும் கருப்பு நிறம் மாறும். எண்ணெய் வடியும் முகமா பச்சை பயிறை தோலுடன் அரைத்து நீரில் குழைத்து முகத்தில் பூசி 20 நிமிடம் கழித்து கழுவினால் முகத்தில் எண்ணெய் பசை மாறி முகம் பளிச்சிடும்.

Previous articleபித்த வெடிப்பு நீங்கி பாதம் அழகுபெறும்! சில டிப்ஸ்!
Next articleசர்கரை நோயால் ஏற்படும் புண்களையே குணப்படுத்தும் ஆற்றல் பெற்ற மூக்குத்திப்பூ! முயற்சித்து பயனடையுங்கள்!