முகத்தின் கருமையை போக்க சோப்பிற்கு பதிலாக இதை பயன்படுத்துங்க!

0
9908

நமது வீட்டில் எளிதில் கிடைக்கும் சில பொருட்களை கொண்டு முகத்தில் பொழிவை அதிகரிக்க செய்யலாம். அது எப்படி என்பது பற்றி இந்த பகுதியில் காணலாம். இன்றைய காலகட்டத்தில், வெயிலினால் சருமம் கருமையாகிவிடுகிறது.

இந்த கருமையை போக்க பல க்ரீம்கள் மற்றும் இராசாயனப்பொருட்களை தான் முகத்தில் தடவ வேண்டும் என்ற அவசியம் இல்லை. நமது வீட்டில் எளிதில் கிடைக்கும் சில பொருட்களை கொண்டு முகத்தில் பொழிவை அதிகரிக்க செய்யலாம். அது எப்படி என்பது பற்றி இந்த பகுதியில் காணலாம்.

சிறிதளவு வெண்ணெயை முகத்தில் தடவி மசாஜ் செய்தால் முகம் வெண்ணெய் போலவே மிருதுவாக மாறும். உங்களுக்கு பிரகாசமான முகம் கிடைப்பதும் உறுதி.

தக்காளி, வெள்ளரிக்காய் ஆகியவற்றை முகத்திற்கு பயன்படுத்துவதன் மூலம் முகத்தில் ஈரப்பதத்தை தக்க வைத்துக்கொள்ளலாம். வீட்டில் தக்காளி, வெள்ளாரிக்காய் ஆகியவற்றை நறுக்கும் போது எல்லாம், முகத்திற்கும் சிறிதளவு எடுத்து போட்டுக்கொள்வது எளிதாகவும் இருக்கும்.

சோப்பிற்கு பதிலாக பாசிப்பயறு மாவு, கடலை மாவு, கஸ்தூரி மஞ்சள் ஆகியவற்றை பயன்படுத்தினால், முகத்திற்கு ஒரு தனி கவர்ச்சியே கிடைக்கும். உங்களது அழகு பல்லாண்டு காலம் நீடித்திருக்கும்.

தினமும் இரவு தூங்குவதற்கு முன்னர் சிறிதளவு பாலில், மஞ்சளை கலந்து பேக் போட்டுக்கொண்டால், முகம் வசீகரமாக இருக்கும். தினமும் காலையில் உங்களது முகத்தில் ஒரு ஒளியை காணமுடியும்.

தினமும் குளிப்பதற்கு முன்னர் கற்றாழை ஜெல்லுடன் மஞ்சளை கலந்து மசாஜ் செய்து பின்னர் குளித்தால், முகப்பருக்கள் இல்லாத தெளிவான சருமத்தை பெறலாம்.

Previous articleசுவாமிக்கு படைத்த வெற்றிலையை என்ன செய்வது! இங்கே போடுவது சரியா! என்ன செய்யலாம்!
Next articleஉங்கள் நட்சத்திரத்திற்கு எந்த தெய்வங்களை வழிபட்டால் அதிஸ்டம் கிடைக்கும் எனத் தெரியுமா!