முகத்திலுள்ள பருவைத் துரத்தும் திருநீற்றுப் பச்சிலை சித்த மருத்துவம்!

0
484

இலை, தழைகளில் உள்ள மருத்துவக் குணங்களை சித்தர்கள் கண்டுபிடித்தது, இன்றும் ஆலவிருட்சமாய் பலன் அளித்துக் கொண்டிருக்கிறது. இதற்கு திருநீற்றுப் பச்சிலை ஓர் ஊதாரணம்.

ஏனெனில் திருநீற்றுப் பச்சிலையின் எண்ணெய்க்கு முகப்பருவை நீக்கும் ஆற்றல் உள்ளது. வேறு எந்த மருத்துவத்திலும் திருநீற்றுப் பச்சிலையின் எண்ணெய் முகப் பருவைப் போக்கப் பயன்படுத்தப்படுவதில்லை. ஆனால் சித்த மருத்துவம் இதனை முகப் பருவுக்குச் சிறப்பித்துக் கூறுகிறது.

திருநீற்றுப் பச்சிலையிலிருந்து எடுக்கப்பட்ட எண்ணெய்யைக் கொண்டு தயாரிக்கப்பட்ட முகப்பரு நீக்கும் கிரீம், பிம்பிள்க்யூர் (Pimplecare) என்ற பெயரில் சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது. எவ்வித மணமூட்டிகளும் சேர்க்கப்படாமல் திருநீற்றுப் பச்சிலையின் இயல்பான மணத்துடன் பிம்பிள்க்யூர் இருக்கிறது.

கிரீமைத் தடவுவது எப்படி? இள வெந்நீரில் முகத்தைக் கழுவித் துடைத்தவுடன் பிம்பிள்க்யூரை முகத்தில் தடவுங்கள். பருக்கள் பாதித்துள்ள இடங்களில் சற்று கூடுதலாகத் தடவுங்கள். பருக்கள் மறையும் வரை காலையும் மாலையும் இரவு படுக்கும் முன்பும் இதை முகத்தில் பூசுங்கள்.

Previous articleநுரையீரல் நோய் குணமாக நாயுறுவி செடியின் விதைகளை காய வைத்து ‍‍- சித்த மருத்துவ குறிப்புகள் !
Next articleஉடம்பின் பல சிக்கலுக்கு காரணமே இந்த மலச்சிக்கல் ! பைல்ஸ் பிரச்சனைக்கு சித்த மருத்துவத்தில் தீர்வு !