சமையல் சோடா நம் வீட்டு பல தேவைகளிற்கு பயன்படுவதுடன், சருமத்தின் அழகிற்கும் உறுதுணையாக இருக்கின்றது.
இதில் பல மருத்துவ குணங்கள் இருப்பதை நம் அனைவரும் நன்கறிந்ததே. இவை சருமம், முடி, பற்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கின்றது.
குளிக்கும் நீரில் சமையல் சோடாவை சிறிதளவு சேர்ப்பதனால் சருமம் புத்துணர்ச்சி பெறுவதுடன், துர்நாற்றம் நீங்கும்.
சமையல் சோடாவில் நம் சருமத்தின் தன்மைக்கு ஏற்றவாறு முகப் பூச்சுக்களை தயாரிக்க முடியும். இது சரும பிரச்சினைகளை தீர்த்து பொலிவுறச் செய்யும்.
சமையல் சோடா முகப்பூச்சு தயாரிப்பது எப்படி?
ஒரு மேசைக்கரண்டி குளிரான நீரில் 1 அல்லது ½ தேக்கரண்டி சமையல் சோடாவை சேர்த்து அடர்த்தியான திரவமாக பெற முடியும்.
இதை சருமத்தில் தடவி 5 முதல் 10 நிமிடங்கள் உலர விடவும். நன்றாக உலர்ந்த பின்பு நீரினால் கழுவவும்.
காய்ந்த சருமத்தை உடையவர்கள் அதிக நேரம் உலர விடுவதை தவிர்க்கவும். ஏனெனில் சமையல் சோடா சருமத்தின் எண்ணெய் தன்மையை உறிஞ்சி விடும்.
நன்மைகள்
• முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மற்றும் அதனால் ஏற்படும் தொற்றுக்களை நீக்க வல்லது.
• முகத்தில் உள்ள பருக்கள், மாசுக்களை அகற்றி பூஞ்சை தொற்றுக்களில் இருந்து சருமத்தைப் பாதுகாக்கின்றது.
• சருமப் பிரச்சினைகளால் ஏற்படும் வலிகளை குணப்படுத்தும்.
• சருமத்தில் உள்ள துவாரங்களின் அடைப்புக்களை நீக்கி சருமம் எண்ணெய்யை உறிஞ்சுவத்ற்கு உதவுகின்றது.
• கண்ணைச் சுற்றியுள்ள கருவளையங்களை அகற்றுகின்றது.