இந்திய மக்களின் நாயகன் என கொண்டாடப்படும் விங் கமெண்டர் அபிநந்தனின் பெயரை ராஜஸ்தான் மாநிலத்தில் பிறந்த இரண்டு குழந்தைகளுக்கு வைக்கப்பட்டுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் தவுசா பகுதியில் வசித்து வரும் விம்லேஷ் மற்றும் மஞ்சு திக்கிவால் தம்பதியினருக்கு அபிநந்தன் இந்திய அரசிடம் ஒப்படைக்கப்பட்ட அன்று ஆண் குழந்தை பிறந்தது.
இதனால், தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக குழந்தைகளுக்கு அபிநந்தன் என பெயர் சூட்டியுள்ளனர்.
விங் கமெண்டர் அபிநந்தன் போன்று தன் மகனும் தைரியமாக நாட்டுக்கு கடமையாற்ற வேண்டும் என கூறியுள்ளனர்.
அபிநந்தனின் சிகை அலங்காரமும் இளைஞர்கள் மத்தியில் பிரபலமாகி வருவது குறிப்பிடத்தக்கது.