மிதுனம் மற்றும் சிம்ம ராசிக்கார ஆண்களுக்கு இப்படி ஒரு அதிஷ்டமா?

0

ஒவ்வொருவர் பிறக்கும் போதும் அவர்களது ஜென்ம நட்சத்திரம் மற்றும் ராசியை வைத்து அவர்களது முழு வாழ்க்கையையும் கணிக்க முடியும் என்கிறது ஜோதிடம்.

ஒருவர் ஜாலியாக இருப்பதற்கும் அவர்களுடைய ராசிக்கும் கிரகங்களுக்கும் நிறைய சம்மந்தம் இருக்கிறது. சிலருக்கு அன்றைக்கு நடக்கும் எல்லா செயல்களுக்கும் தன்னுடைய ராசியும் தான் அணிந்திருக்கும் உடையும் தான் காரணம் என எளிதாக நிம்மதியுடன் அன்றைய நாளை கடந்து சென்று விடுவார்கள்.

சிலரோ இன்றைய நாள் சிறப்பாக இல்லாததற்கு, நாம் காலையில் ராசிபலனைப் பார்த்து அதன்படி நடந்து கொள்ளாததுதான் காரணமோ என்று கூட நினைக்கலாம். அப்படி மக்களின் மனதில் ஆழப்பதிந்த ஒரு விஷயம்தான் ஜோதிடம்.

அப்படி ஜோதிடத்தில் பெண்களை ஆண்கள் பின்னால் அலைய வைக்கும் இரண்டு ராசிகள் காணப்படுகின்றது.

குறிப்பாக மிதுனம் மற்றும் சிம்ம ராசிகளில் பிறந்த ஆண்கள் கவர்ச்சிகரமானவர்கள் என்று கூறப்படுகின்றது.

மிதுனம்

மிதுன ராசியில் பிறந்த ஆண்கள் பார்ப்பதற்கு வசீகரமான தொற்றத்தை கொண்டவர்களாகவும், பெண்களின் கவனத்தை எந்த ஒரு போராட்டமும் இல்லாமல் கடைக் கண் பார்வை மூலமே ஈர்க்கக் கூடியவர்களாகவும் இருப்பார்களாம்.

இவர்களைச் சுற்றி எப்பொழுதும் அன்பையும், பாசத்தையும், காதலையும் பொழியும் பெண்கள் இருப்பார்களாம்.

சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால் காதல் மன்னனாக வலம் வருவார்களாம். மேலும் நகைச்சுவை உணர்வு அதிகம் கொண்டவர்களாகவும், தனது பேச்சுத் திறனால் அனைவரையும் கவரக் கூடியவர்களாகவும், பெண்களின் மனதைப் படிக்க தெரிந்தவர்களாகவும் இருப்பார்களாம். இந்தப் பண்புகளினால் பெண்களைக் கவரும் ஆண் ராசிகளின் வரிசையில் முதலில் இருப்பது மிதுனம்.

சிம்மம்

அடுத்த இடத்தில் இருப்பது சிம்ம ராசி. மற்றவரைப் புரிந்து நடப்பதிலும், உறவுகளை வலுப்படுத்துவதிலும் இவர்கள் கெட்டிக்காரர்களாம்.

இயற்கையாகவே சிம்ம ராசியில் பிறந்தவர்கள் செல்வாக்கு கொண்டவர்களாகவும், அடக்கமானவர்களாகவும் இருப்பார்கள்.

இவர்கள் பெண்களிடம் வழிந்து பேசும் போதும் அதுவும் பல பெண்களுக்குப் பிடிக்கும் வகையில் அளவாகப் பேசும் திறமை படைத்தவர்களாம்.

குறிப்பாகப் பெண்களுக்கு ஒரு நல்ல தோழனாக இருக்கக் கூடியவர்கள் இந்த ராசியில் பிறந்தவர்கள். இதைத் தவிர ஒரு லட்சிய பிடிப்புடன் இருக்கும் இவர்களது இயல்பு பெண்களுக்கு மிகவும் பிடிக்குமாம்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleகுதிக்கால் அழற்சி, குதிவாதம், வீக்கம், வலி பயிற்சிகள் மற்றூம் சிகிச்சை விளக்கம் !
Next articleபல் தேய்க்கும் போது ஈறுகளில் ரத்தம் வடிகிறதா? இந்த வைத்தியத்தை ஒரு முறை செய்து பாருங்க!