மார்புவலி, படபடப்பு, மூச்சுத் திணறல், தலைச்சுற்றல்,மயக்கம், அதிகமான வியர்வை போன்ற பிரச்சனைகளுக்கு.

0
1589

அறிகுறிகள்:
படபடப்பு.
மார்புவலி.
மூச்சுத் திணறல்.
அதிகமான வியர்வை.

தேவையான பொருட்கள்:
பேரீச்சம் பழம்

செய்முறை:
பேரீச்சம் பழம் நான்கை முதல்நாள் மதியம் ஊறவைத்து மறுநாள் காலையில் உணவுக்கு முன்பு சாப்பிட்டு வந்தால் மார்புவலி குறையும்.

அறிகுறிகள்:
மார்பு வலி.

தேவையான பொருட்கள்:
இஞ்சிச்சாறு.
எலுமிச்சைப் பழச்சாறு.
தேன்.

செய்முறை:
இஞ்சியை இடித்துச் சாறு எடுத்து அதனுடன் எலுமிச்சைப் பழச்சாறு, தேன் ஆகியவற்றை கலந்து சாப்பிட்டு வந்தால் மார்பு வலி குறையும்.

அறிகுறிகள்:
மார்பு வலி.
மூச்சுத் திணறல்.
படபடப்பு.

தேவையான பொருட்கள்:
அன்னாசிப் பழம்.
சர்க்கரை.

செய்முறை:
அன்னாசிப் பழத்தைத் தோல் நீக்கி, நறுக்கி 300 கிராம் எடுத்து அதன் மீது சர்க்கரையை தூவி இரவில் பாத்திரத்தில் ஊறவைத்து காலையில் அதை சாப்பிட்டு வந்தால் மார்பு வலி குறையும்.

அறிகுறிகள்:
மார்புவலி.
படபடப்பு.
தலைச்சுற்றல்.

தேவையான பொருட்கள்:
அகத்திக்கீரை.
பால்.

செய்முறை:
அகத்திக்கீரையை வெயிலில் நன்கு காயவைத்துப் பொடி செய்து கொள்ளவேண்டும். அந்த பொடியை அரைக்கரண்டி எடுத்து பாலில் கலந்து காலை, மாலை சாப்பிட்டு வந்தால் மார்பு வலி குறையும்.

அறிகுறிகள்:
மார்பு வலி.
படபடப்பு.
மூச்சுத் திணறல்.
மயக்கம்.

தேவையான பொருட்கள்:
அகத்திக் கீரை.

செய்முறை:
அகத்திக் கீரையை தேவையான அளவு எடுத்து வெயிலில் காயவைத்து இடித்து சாலித்து ஒரு சீசாவில் பத்திரப்படுத்தி கொள்ளவேண்டும். அந்த பொடியை ஆறு கிராம் எடுத்து வெந்நீரில் கலந்து காலை, மாலை என இருவேளை வீதம் ஏழு நாட்கள் சாப்பிட்டு வந்தால் மார்பு வலி குறையும்.

அறிகுறிகள்:
படபடப்பு.
மார்புவலி.
மூச்சு திணறல்.

தேவையான பொருட்கள்:
இலந்தை பழம்.

செய்முறை:
இலந்தை பழத்தை தினமும் சாப்பிட்டு வந்தால் நெஞ்சுவலி குறையும்.

Previous articleகாதுவலி, காதுமந்தம், காது வீக்கம், காது குத்தல், காது இரைச்சல் போன்ற பிரச்சனைகளுக்கு சிறந்த தீர்வுகள்!
Next articleவீட்டிற்கு முன் தினமும் கோலம் போடுவது ஏன்?