Home Patti Vaithiyam மார்பகப்புற்றுநோயை தடுக்கும் மாதுளம் பழம் – ஆய்வில் தகவல்!

மார்பகப்புற்றுநோயை தடுக்கும் மாதுளம் பழம் – ஆய்வில் தகவல்!

0
865

மார்பகப்புற்றுநோய் தடுக்கும் ஆற்றல் மாதுளம் பழத்திற்கு உண்டு என்று சமீபத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. அமெரிக்க புற்றுநோய் ஆராய்ச்சியாளர் சங்கத்தின் “கேன்சர் பிரிவென்சன் ரிசர்ச்” பத்திரிகையில் இந்த தகவல் வெளியாகி உள்ளது எண்ணற்ற பெண்களின் மனதில் பாலை வார்த்திருக்கிறது.

மார்பகப்புற்றுநோயும், கர்ப்பப்பை புற்றுநோயும் பெண்கள் அதிகம் அச்சப்படும் விசயமாகும். பெண்களின் உடலில் ஆஸ்ட்ரோஜென் எனப்படும் ஹார்மோன் சுரப்பு அதிகரிப்பதன் காரணமாகவே 4 ல் 3 பெண்களுக்கு புற்று நோய் ஏற்படலாம் என கணிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பெண்களின் மார்பகப்புற்றுநோயை தடுக்கும் ஆற்றல் மாதுளம் பழத்திற்கு உண்டு என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அரிதான அமிலம்
மாதுளம்பழத்தில் இயற்கையாகவே பைட்டோகெமிக்கல் உள்ளது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இந்த பைட்டோகெமிக்கலானது ஆஸ்ட்ரோஜென் எனப்படும் ஹார்மோனை கட்டுப்படுத்துகிறது. இதனால் மார்பக புற்றுநோய்க்கு காரணமான செல்கள் மற்றும் கட்டி வளர்வது தடுக்கப்படுகிறது” என கலிபோர்னியாவின் டாரேட்டில் உள்ள சிட்டி ஆப் ஹோப் மார்பக புற்றுநோய் ஆராய்ச்சி திட்டத்தின் இணை தலைவர் ஷியுவான் சென் தெரிவித்துள்ளார்.

புற்றுநோய் செல்கள்
மனிதர்கள் மற்றும் விலங்குகளுக்கு மாதுளம்பழம் கொடுத்து ஆய்வு செய்யப்பட்டது. இதில் உள்ள எல்லஜிக் அமிலம் என்று அழைக்கப்படும் இந்த அமிலம் புற்றுநோய் செல்கள் வளர்வதைக் கட்டுப்படுத்தியாக ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

இந்த ஆய்வு முடிவு பற்றி கருத்து தெரிவித்துள்ள ஓஹியோ ஸ்டேட் யுனிவர்சிட்டியின் இன்டர்னல் மெடிசின் துறை பேராசிரியர் கேரி ஸ்டோனர், மாதுளையில் மருத்துவ குணங்கள் அதிகம் எனினும், இது ஆய்வக முடிவுதான். நிஜமாக இது சாத்தியமா என்பதை உறுதியாக கூற இயலாது என தெரிவித்துள்ளார்.

Previous articleவைத்தியர்களே எனது மகனை கொன்றார்கள்! தாய் வெளியிடும் மனதை உறையவைக்கும் ஆதாரங்கள்!
Next articleஉருளைக்கிழங்கு சாப்பிடுங்க! இதயநோய் வராது!