Home Patti Vaithiyam பெண்களின் தொங்கும் மார்பகத்தை சரி செய்யலாம்!

பெண்களின் தொங்கும் மார்பகத்தை சரி செய்யலாம்!

0
6442

பெரும்பாலான பெண்கள் சந்திக்கும் பிரச்சனைகளில் ஒன்று தான் தொங்கும் மார்பகங்கள். இந்த பிரச்சனையை பெரிய அளவில் மார்பகங்கள் இருக்கும் பெண்கள் தான் அதிகம் சந்திப்பார்கள். மேலும் இப்படி மார்பகங்கள் பெரியதாக இருக்கும் பெண்களால் தாங்கள் விரும்பிய ஆடைகளை அணிய முடியாது. ஒரு குறிப்பிட்ட ஆடைகளைத் தான் அணிய முடியும். . ஏனெனில் ஒருசில ஆடைகளை அவர்களை மிகவும் அசிங்கமாக வெளிக்காட்டும். பொதுவாக மார்பகங்கள் வயதாகினால், தாய்ப்பால் கொடுப்பதால், சரியான உள்ளாடைகளை அணியாததால், ஊட்டச்சத்து குறைப்பாட்டினால், இறுதி மாதவிடாய் நெருங்கினால் மற்றும் புவி ஈர்ப்பு விசையினால் தொங்க ஆரம்பிக்கும்.

மார்பகங்களில் எந்த ஒரு தசைகளும் இல்லை. அது இழைம திசுக்களை மட்டுமே கொண்டுள்ளது. எனவே உடற்பயிற்சியின் மூலம் மார்பகங்களை பெரிதாக்க முடியாது. இருப்பினும் மார்பகங்களுக்கான உடற்பயிற்சியை செய்வதன் மூலம், மார்பகங்கள் நிலைமாறாமல் இருக்கும். அதிலும் புஷ் அப் செய்வதன் மூலம், மார்பகங்களின் வடிவம் அழகாக்கப்பட்டு, மார்பகங்களில் உள்ள அதிகப்படியான கொழுப்புக்கள் வெளியேற்றப்படும். எனவே உங்கள் மார்பகங்கள் தளர்ந்து தொங்காமல் இருக்க வேண்டுமெனில், பளு தூக்குதல், செஸ்ட் பிரஸ் போன்றவற்றை செய்து வாருங்கள்.

தாய்ப்பால் கொடுப்பது மார்பகங்களைத் தளர்த்தும்!
தாய்ப்பால் கொடுப்பதன் மூலம் எப்போதும் மார்பகங்கள் தளர்வதில்லை. பிரசவத்திற்கு பின் அதிகப்படியான எடை ஒரே நேரத்தில் குறைவதால் தான் மார்பகங்கள் தளர்கிறது. எனவே இதனைத் தவிர்க்க பிரசவத்திற்கு பின் நல்ல கொழுப்புக்கள் நிறைந்த உணவுகள் மற்றும் போதிய அளவில் நட்ஸ்களை சாப்பிட வேண்டும்.

பிரா அணிவதன் மூலம் மார்பகங்கள் தளர்வதைத் தடுக்கலாம்!
மற்றொரு கட்டுக்கதை பிரா அணிவதன் மூலம் மார்பகங்கள் தளர்ந்து தொங்குவதைத் தடுக்கலாம் என்பது. பிராவை 24/7 அணிவதன் மூலம் மார்பகங்கள் தளர்வதைத் தடுக்கலாம் என்பது உண்மையல்ல. ஆனால் சரியான மற்றும் ஃபிட்டான பிரா அணிவதன் மூலம் தளர்ந்த மார்பகங்களுக்கு ஆதரவைத் தான் கொடுக்க முடியுமே தவிர, சரிசெய்ய முடியாது.

சிறிய மார்பகங்கள் தளராது!
இது மற்றொரு மடத்தனமான கட்டுக்கதை. அது என்னவெனில் பெரிய மார்பகங்கள் தான் தொய்வுறும் என்பது. உண்மையில் மார்பகங்களில் உள்ள கொழுப்பு மற்றும் மார்பக திசுக்களின் அளவைப் பொறுத்து தான் தொய்வுறுவது உள்ளது. அதிலும் மார்பகங்களில் கொழுப்புக்கள் அதிகமாகவும், மார்பக திசுக்களின் அளவு குறைவாகவும் இருந்தால் தான் மார்பகங்கள் தொய்வுறும்.

புகைப்பிடிப்பதால் மார்பகங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை!
இது ஒரு கட்டுக்கதை. உண்மையில் புகைப்பிடிப்பதால், கொலாஜன் மற்றும் இழைம திசுக்கள் உடைக்கப்பட்டு, அதனால் மார்பகங்கள் தளர ஆரம்பிக்கும். எனவே உங்கள் மார்பகங்கள் கச்சிதமான அமைப்புடன் இருக்க புகைப்பிடிப்பதை முதலில் நிறுத்துங்கள்.

மார்பகங்கள் தளர்ந்தால் சரிசெய்ய முடியாது!
இது தவறான கருத்து. மார்பகங்கள் தளர்ந்தால், அதனை ஒருசில இயற்கை வழிகளின் மூலம் மீண்டும் உறுதியுடன் இருக்கச் செய்யலாம். அதற்கு நல்ல கொழுப்பு நிறைந்த உணவுகளை உண்பது, மார்பகங்களில் எண்ணெய் மசாஜ் செய்வது, தண்ணீர் அதிகம் குடிப்பது, சில மார்பக பயிற்சிகளை செய்வதன் மூலம், உறுதியிழந்த மார்பகங்களின் உறுதித்தன்மையை அதிகரிக்கலாம்.

Previous articleமூல நோயை குணப்படுத்தும் மருத்துவம்..!உள்மூலம் வெளிமூலம் சரியாவதற்கு!
Next articleஉள்ளாடை அணியாமல் துங்குவதால் ஏற்படும் நன்மைகள்!