மாப்பிள்ளைக்கு தாலி கட்டும் மணமகள்! ஆச்சர்யத்தை ஏற்படுத்தும் கலாச்சாரம்!

0

பொதுவாகவே இந்து முறைப்படி மணமகன், மணமகள் கழுத்தில் தாலி கட்டுவது வழக்கம். ஆனால், வழக்கத்துக்கு மாறாக மணமகனுக்கு மணமகள் தாலி கட்டும் சம்பிரதாயம் ஒரு சமயத்தின் இடையே கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

கர்நாடக மாநிலத்தில் உள்ள லிங்காயத் சமயம் எனும் சமுதாயத்தை தோற்றுவித்தவர் பசவண்ணா அவர்களின் கொள்கைகளை பின்பற்றும் மக்கள் இன்றும் பலரும் உள்ளனர்.

பசவண்ணா அவர்கள் பன்னிரண்டாம் நூற்றாண்டின் சமூக சீர்திருத்தவாதியாக இருந்த அவரின் கொள்கைகளை பின்பற்றி வருபவர்கள் திருமணத்தின் போது, வேத மந்திரங்களை ஓத மாட்டார்கள். மேலும், அவர்கள் திருமணத்தில் கன்னியாதானம், அட்சதை தூவுவது போன்ற சம்பிரதாயங்கள் செய்யமாட்டார்கள்.

முக்கியமாக திருமணத்தின் போது மணமகள் கழுத்தில் மணமகன் தாலி கட்டும் சம்பிரதாயம் இவர்களிடம் கிடையாது. மாறாக, மணமகன் கழுத்தில் மணமகள் தாலி கட்டுவார். இந்தியாவில் உள்ள பலருக்கும் தெரியாத காரணத்தினால், மணமகள் மணமகனுக்கு தாலி கட்டும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

கர்நாடக மாநிலம், விஜயபுரா மாவட்டத்தில் உள்ள வாடா பட்டணம் எனும் கிராமத்தில், லிங்காயத் சமயத்தை சேர்ந்த, பசவரின் கொள்கைகளை பின்பற்றும் குடும்பங்களை சேர்ந்த பிரபுரா- அங்கிதா, அமித் – பிரியா இரண்டு ஜோடிகளுக்கு திருமண விழா நேற்று நடைபெற்றது.

அப்போது, மணமகள்கள், மணமகன்களின் கழுத்தில் தாலி கட்டினார்கள். மேலும், திருமண நிகழ்ச்சிக்கு வந்த உறவினர்கள், நண்பர்களுக்கு பசவரின் தத்துவங்கள் அடங்கிய புத்தகங்கள் வழங்கப்பட்டு அவரின் கொள்கைகள் எடுத்துரைக்கப்பட்டது.

அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஉங்க வீட்டுல இந்த 8 செடியில ஏதாவது ஒன்னு இருந்தா கூட உங்க ஆயுள் கெட்டி! எப்படி தெரியுமா!
Next articleஅழகிய பெண்கள் வேண்டும்! பணக்கார ஆண்களுக்கு ஒத்துழைக்காததால் துன்புறுத்தப்பட்ட மாணவி! அம்பலமான தகவல்!