மாதவிடாய் காலத்தில் வரும் முகப்பருக்களை தடுக்க ஒரே ஒரு வழி!

0

மாதவிடாய் காலத்தில் வரும் முகப்பருக்களை தடுக்க ஒரே ஒரு வழி!

மாதவிடாய் காலத்துக்கு இரண்டு நாள்களுக்கு முன்னரே பெண்களுக்கு இதன் அறிகுறிகளைக் காட்டும் விதமாக முகத்தில் பருக்கள் வர தொடங்கும்.

மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு புரோஜெஸ்டிரோன் மற்றும் ஈஸ்ட்ரோஜன் உற்பத்திக்குறைவதாலும், ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகளாலும் சருமம் வறண்டு, எண்ணெய் பிசுபிசுக்கள் ஏற்படுவதோடு முகப்பரு பிரச்சனைகளையும் உண்டாக்குகிறது.

ஏற்கனவே மாதவிடாய் காலத்தில் பெண்கள் வயிற்று வலியால் அவதிப்படும் நிலையில், முகப்பருக்களும் சில சமயங்களில் பெண்களுக்கு வலியை ஏற்படுவதாக அமையக்கூடும்.

எனவே இதுப்போன்ற நேரத்தில் எந்தவித மாத்திரைகளையும் உட்கொள்ளாமல் இயற்கை முறைகளில் முகத்தில் ஏற்படும் பருக்களுக்கு தீர்வு காணலாம்.

மஞ்சள்
மஞ்சள் உங்களின் சரும பிரச்சினைகளுக்கு மிக சிறந்த தீர்வாக உள்ளது.

கிருமி நாசினி மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி பண்புகளை மஞ்சள் அதிகளவில் கொண்டுள்ளது.

எனவே மாதவிடாய் சமயத்தில் ஏற்படும் முகப்பருக்களைக் கட்டுப்படுத்த மஞ்சள் பேஸ்ட்டைப் பயன்படுத்த வேண்டும்.

மஞ்சளை தண்ணீரில் நன்றாக கலக்கிக் கொண்டு பேஸ்ட் தயாரித்து பருக்கள் இருக்கும் இடத்தில் தடவி சுமார் 20 நிமிடங்கள் அப்படியே வைத்திருக்க வேண்டும்.

இதுப்போன்று ஒரு நாளைக்கு இரண்டு முறை செய்யும் போது முகப்பரு பிரச்சனைகள் ஏற்படாது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஅக்டோபர் 26 வரை புதனின் தாக்கம் இருக்கும் ராசிக்காரர்கள் யார்?
Next articleபருப்பை ஊறவைக்காமல் சமைக்க கூடாது! ஏன்னு தெரியுமா?