Home thatstamil one india tamil oneindia tamil மாணவியின் பாலியல் காட்சிகளை வீடியோ எடுத்த இளைஞர்!

மாணவியின் பாலியல் காட்சிகளை வீடியோ எடுத்த இளைஞர்!

0
678

தமிழ்நாட்டில் கல்லூரி மாணவிக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து பாலியல் தொந்தரவு செய்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

திருவண்ணாமலையை அடுத்த நீலாந்தாங்கள் கிராமத்தை சேர்ந்தவர் பாலாஜி என்கிற தமிழ்செல்வன்.

இவர் விழுப்புரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பொறியியல் படித்தார்.

அப்போது அதே கல்லூரியில் பொறியியல் படித்த பெண்ணுடன் பாலாஜிக்கு பழக்கம் ஏற்பட்ட நிலையில் இருவரும் நெருங்கி பழகிவந்தனர்.

இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர் அப்பெண்ணின் வீட்டுக்கு பாலாஜி வந்துள்ளார்.

அப்போது வீட்டில் யாரும் இல்லாத நிலையில் குளிர்பானத்தில் மயக்க மருந்து பெண்ணுக்கு கொடுத்துள்ளார்.

பின்னர் பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த பாலாஜி அதை செல்போனில் படம் பிடித்துள்ளார்.

இந்த காட்சிகளை பெண்ணிடம் காட்டி அவரை மிரட்டியும் வந்துள்ளார்.

இந்நிலையில் அப்பெண்ணுக்கு வேறு நபருடன் திருமண ஏற்பாடுகள் நடந்த நிலையில் தனது தந்தையுடன் பெண் வீட்டுக்கு பாலாஜி சென்றுள்ளார்.

பின்னர் தன்னை தான் அந்த பெண் திருமணம் செய்து கொள்ள வேண்டும் எனவும், இல்லையெனில் வீடியோவை சமூகவலைதளங்களில் வெளியிடுவேன் எனவும் மிரட்டியுள்ளார்.

இதையடுத்து பெண்ணின் பெற்றோர் இது குறித்து பொலிசில் புகார் அளித்த நிலையில் பாலாஜி மற்றும் அவரது தந்தை மீது வழக்குப்பதிவு செய்த பொலிசார் பாலாஜியை தற்போது கைது செய்துள்ளனர்.

Previous articleதம்பி மனைவியை துண்டுதுண்டாக வெட்டி கொன்றது ஏன்? மைத்துனர் பரபரப்பு வாக்குமூலம்!
Next articleஅப்பா இப்படி செய்யாதீர்கள்: நெஞ்சை உருகவைத்த 13 வயது சிறுமியின் வாக்குமூலம்!