மாணவன் ஒருவனுடன் பல முறை உறவு கொண்ட ஒரு இளம் ஆசிரியை சிறையில் அடைக்கப்படும் வீடியோ வெளியாகியுள்ள நிலையில், அந்த மாணவனை மயக்குவதற்கு பள்ளியின் ஆப் ஒன்றையே அவர் பயன்படுத்தியது தெரியவந்துள்ளதையடுத்து பெற்றோர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
அரிசோனாவைச் சேர்ந்த பிரிட்டனி ஸமோரா (27) என்னும் திருமணமான ஆசிரியை ஒருவர், 13 வயதான தனது மாணவன் ஒருவனை மயக்கி அவனுடன் பத்து முறைக்கும் மேல் பாலுறவு கொண்டுள்ளார்.
தற்செயலாக தங்கள் மகனுடைய மொபைல் போனில் ஆபாச செய்திகளையும், நிர்வாணப் படங்களையும் கண்டு அதிர்ச்சியுற்ற பெற்றோர் பொலிசாரிடம் புகாரளிக்க, பொலிசில் சிக்கினார் பிரிட்டனி.
விசாரணையின் அந்த மாணவனுடன் வகுப்பறையிலும் தனது காரிலும் பல முறை அவர் உறவு கொண்டுள்ளது தெரிய வந்துள்ளது.
அவர் மீது ஏராளமான முறைதவறிய பாலியல் நடத்தை மற்றும் துஷ்பிரயோக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில் அவர் அந்த மாணவனை மயக்குவதற்கு, பள்ளியில் ஆசிரியர்கள் வீட்டுப்பாடம் முதலான விடயங்களைத் தெரிவிக்க பயன்படுத்தும் ஆப்பை பயன்படுத்தியது தெரியவந்ததால், பெற்றோர்கள் அதிர்ச்சியில் மூழ்கியுள்ளனர்.
பள்ளி இந்த முறைகேடான செயல்களை கண்காணிக்கத் தவறியதையடுத்து, பாதிக்கப்பட்ட மாணவனின் பெற்றோர் பள்ளி மீது 2.5 மில்லியன் டொலர்கள் இழப்பீடு கோரி வழக்குத் தொடர்ந்துள்ளனர்.