மாக்கந்துர மதுஷ் உள்ளிட்டவர்கள் தொடர்பில் துபாய் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு!

0
429

மாக்கந்துர மதுஷ் மற்றும் அவரின் சகாக்களை தொடர்ந்து தடுத்து வைத்து விசாரணை செய்ய துபாய் அல் – ரபா பொலிஸாருக்கு அந்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனினும், பாடகர் அமல் பெரேராவின் மகன் நதிமல் மற்றும் மதுஷின் இரண்டாவது மனைவி உட்பட எட்டு பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

போதை பாவனையில் அவர்கள் ஈடுபடவில்லை என தெரியவந்ததையடுத்தே குறித்த அனைவரும் விடுவிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

போதைப்பொருள் வியாபாரத்துடன், தொடர்புடையவர் என்றக் குற்றச்சாட்டில் இலங்கையில் தேடப்பட்டு வந்த மாக்கந்துர மதுஷ் மற்றும் அவருடன் இணைந்த பலர் அண்மையில் துபாயில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தனர்.

ஐக்கிய அரபு இராச்சிய நாட்காட்டியின்படி வெள்ளி, சனிக்கிழமை விடுமுறை நாட்கள் என்பதாலும் ஞாயிற்றுக்கிழமை வாரத்தின் முதல் நாள் என்பதாலும் இன்று மதுஷ் உள்ளிட்டவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

இந்நிலையிலேயே, மாக்கந்துர மதுஷ் மற்றும் அவரின் சகாக்களை தொடர்ந்து தடுத்து வைத்து விசாரணை செய்ய துபாய் அல் – ரபா பொலிஸாருக்கு அந்நாட்டு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

Previous articleஇசைப்பிரியாவையும் பாலச்சந்திரனையும் இராணுவம் சுட்டமைக்கு ஆதாரமே இல்லை!
Next articleவயிறு வலியால் துடித்த பெண்! அறுவைசிகிச்சையில் எடுக்கப்பட்டது என்ன தெரியுமா!