மற்றுமொரு ஐரோப்பிய பெண்ணுக்கு இலங்கையில் ஏற்பட்ட பரிதாபம்!

0
366

ஐரோப்பிய நாடு ஒன்றிலிருந்து இலங்கைக்கு வந்த இளம் பெண்ணொருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்த முயற்சிக்கப்பட்டுள்ளது.

கொக்கல கடற்கரை பிரதேசத்தில் வைத்து 26 வயதான பெண் ஒருவரே துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார். இவர் நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் 25 வயதான இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஹபராதுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஓய்வு பெறுவதற்காக இலங்கைக்கு வருகைதந்த குறித்த பெண் கொக்கல பிரதேச சுற்றுலா ஹோட்டலில் தங்கியிருந்துள்ளார்.

அங்கிருந்து கொக்கல கடற்கரைக்கு நடந்து சென்ற பெண்ணை சந்தேக நபர் பாலியல் துஷ்பிரயோகம் செய்யும் போது அந்த பெண் கத்தி கூச்சலிட ஆரம்பித்துள்ளார்.

இதன்போது சந்தேக நபர் முச்சக்கர வண்டி ஒன்றில் ஏறி தப்பிச் சென்றுள்ளார். எனினும் குறித்த பெண் பொலிஸ் நிலையத்தில் மேற்கொண்ட முறைப்பாட்டிற்கமைய அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை கடந்த மாதம் இலங்கை வந்த ஐரோப்பிய பெண்ணொருவர் மர்மமான முறையில் கூட்டு பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டிருந்தார். இதன்காரணமாக வெளிநாட்டு பெண்களை இலங்கைக்கு வர வேண்டாம் என பாதிக்கப்பட்ட பெண் ஊடகங்கள் வாயிலாக அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Previous articleதினம் தினம் சாகிறேன்..! ஜெயிலில் கண்ணீர் விட்டு கதறும் அபிராமி!
Next articleவிஜய் படத்தில் சொன்ன கருத்து..! கொட்டாச்சி வாழ்க்கையிலே ஏற்பட்ட மாற்றம்! வைரல் ஆகும் வீடியோ நீங்களே பாருங்கள்!