மரியாதையை பிச்சை எடுக்காதீங்க மோகன் வைத்யாவை விளாசிய பிரபல நடிகை !

0
498

சாண்டியின் முன்னாள் மனைவியான காஜல் மரியாதையை பிச்சை எடுக்காதீர்கள் என சாக்ஷி, மோகன் வைத்யாவினை விளாசியுள்ளார்.

முன்பு பிக்பாஸ் நிகழ்ச்சியினைப் பற்றி பொதுவாக கருத்து தெரிவித்து வந்த காஜல், தற்போது கவின் சாண்டிக்காக ஆதரவு தெரிவித்தது மட்டுமின்றி அவர்களுக்காக சக போட்டியாளர்களை கழுவி ஊற்றியும் வருகின்றார்.

இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் நேற்றைய எபிசோடு குறித்து டிவிட்டரில் காஜல் கருத்து தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினத்தில் லொஸ்லியாவிற்கு கொடுக்கப்பட்ட பச்சோந்தி விருதினை தூக்கி எறிந்தது மட்டுமின்றி படுபயங்கரமான ருத்ரதாண்டவமும் ஆடினார்.

ஒரு கட்டத்தில் மோகன் வைத்தியாவின் வயதிற்கு கூட மரியாதை கொடுக்காமல் ஹலோ என்று அழைத்ததால் மோகன் மற்றும் லொஸ்லியா இடையே கடும் வாக்குவாதம் எழுந்தது. அப்போது மோகன் லொஸ்லியாவை மரியாதையாக பேசு என்று கூறினார்.

அதற்கு லொஸ்லியா அப்படிதான் பேசுவேன் நீங்கள் மரியாதையாக பேசிக்கொள்ளுங்கள் என தெனாவட்டாக பதிலளித்தார். இந்நிலையில் லாஸ்லியா பேசியது சரிதான் என தனது கருத்தினை சாண்டியின் முன்னாள் மனைவியான காஜல் கூறியதோடு, மோகன் வைத்யா மற்றும் சாக்ஷியையும் கடுமையாக விளாசியிருக்கிறார்.

அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில், நிச்சயமாக.. நடுவர்களாக இருக்க ஒரு தகுதி வேணும், அது இவங்களுக்கு கண்டிப்பா இல்ல. தகுதி இருந்தால் தான் மரியாதை கொடுக்க முடியும். மரியாதையை பிச்சை எடுக்கவும் கூடாது. அது தானா கிடைக்னும் என்று பதிவு செய்துள்ளார்.

Previous articleபிக்பாஸ் வீட்டில் இருந்து வெயியேறிய சேரனுக்கு இறுதியில் அடித்த அதிர்ஷ்டம்! கடும் அதிர்ச்சியில் ரசிகர்கள்!
Next articleவார ராசிப்பலன் – செப்டம்பர் 8 முதல் 14 வரை!