மனைவிக்காக புகைப்பட நிருபரை தள்ளிவிட்ட வடகொரியா ஜனாதிபதி: வைரல் வீடியோ!

0

வடகொரியா- தென் கொரியா ஜனாதிபதிகளின் சந்திப்பின் போது புகைப்பட நிருபரை கிம் ஜாங் உன் தள்ளி நிற்கும்படி கூறும் வீடியோ வைரலாகிவருகிறது.

சமீபத்தில் நடந்து முடிந்த இரு கொரிய ஜனாதிபதிகளின் சந்திப்பு உலக அமைதிக்கான ஒரு பகுதியாகவே பார்க்கப்படுகிறது.

60 ஆண்டுகளாக நீடித்து வந்த போர் பதற்ற நிலை முடிவுக்கு வந்ததாக கருதப்படும் நிலையில், விரைவில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மற்றும் வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன்னின் சந்திப்பு நடைபெறவிருக்கிறது.

கொரிய ஜனாதிபதிகள் மட்டுமின்றி அவர்களின் மனைவிகளும் இரவு விருந்தில் கலந்து கொண்டனர்.

இதுதொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வைரலாகின, இந்நிலையில் வடகொரியா ஜனாதிபதியின் மனைவி மாளிகைக்கு வந்தவுடன், அவரை புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்த நிருபரை பின்னால் இருந்து கிம் ஜாங் உன் தள்ளிவிடும் வீடியோ வெளியாகியுள்ளது.

தென் கொரியா ஜனாதிபதிக்கு மனைவியை அறிமுகம் செய்யும் பொருட்டு அவர் இதை செய்திருக்கலாம் என கூறப்படுகிறது.

Previous articleவிமானத்தில் பணிப்பெண்ணாக இருந்த வாணி போஜனுக்கு கிடைத்த அதிஷ்டம்! இந்த நடிகருடன் நடிக்க ஆசையாம்..?
Next articleஇன்றைய ராசிபலன் 03.05.2018!