குடும்பத்தை கூட கவனிக்க இயலாத அளவிற்கு கடுமையான பணிச்சூழல். அதிகாலை எழுந்தது முதல் இரவு உறங்குவது வரை ஓயாத ஓட்டம். இதனால் எழும் மன அழுத்தம் உடல் நிலையை பாதிக்கிறது. இதனை தடுக்க அவ்வப்போது ரிலாக்ஸ் செய்து கொண்டால் மன அழுத்தம் ஏற்பட வாய்ப்பில்லை என்கின்றனர் உளவியலாளர்கள். மனதை ரிலாக்ஸ் செய்ய மூன்று முக்கிய வழிமுறைகளையும் அவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். அவை உங்களுக்காக.
சுறுசுறுப்பாக இருங்கள்
மனம் பாரமாக இருப்பது போல உணர்கிறீர்களா? உடனே மனதை உற்சாகப்படுத்தும் வகையில் சுறுசுறுப்பாக செயல்படுங்கள். காற்றுவெளியில் ஓடலாம். ஜிம் சென்று உடற்பயிற்சியில் ஈடுபடலாம் என்றும் கூறியுள்ளனர் உளவியலாளர்கள். இதனால் உடலில் சுரக்கும் ரசாயனம் மன அழுத்தத்தை கட்டுப்படுத்தும். உடற்பயிற்சியானது உடலுக்கு உரமளிப்பதோடு மனதையும் உற்சாகப்படுத்தும் அதோடு மனதை ரிலாக்ஸ் செய்து ஆழ்ந்த உறக்கத்தை அளிக்கும் என்கின்றனர் உளவியலாளர்கள்.
அன்பான அரவணைப்பு
மன அழுத்தம் அதிகமான நாம் நேசத்திற்குரியவரிடம் அமர்ந்து அவரது அரவணைப்பில் உரையாட வேண்டும் என்கின்றனர் உளவியலாளர்கள். இதனால் மன அழுத்தம் கட்டுப்பாட்டிற்குள் வந்துள்ளதாக ஆய்வு முடிவு தெரிவித்துள்ளது. இந்த நேசமான அரவணைப்பினால் உடலில் சுரக்கும் ஹார்மோன் மன அழுத்தம் ஏற்படுத்தும் ஹார்மோன் சுரப்பை கட்டுப்படுத்துகிறதாம். இதனால் மனம் ரிலாக்ஸ் ஆவதோடு உடல் நலமும் பாதுகாக்கப்படுகிறது.
இந்த நிமிடத்தை எண்ணுங்கள்
மனதை பாதிக்கும் எண்ணங்களை மனதை விட்டு அழித்துவிடுங்கள் என்கின்றனர் உளவியலாளர்கள். ஏனெனில் தேவையற்ற எண்ணங்கள் மன அழுத்தத்தை ஏற்படுத்துவதோடு மனதையும் அழுத்தத்திற்குள்ளாக்கும். எனவே பழைய நினைவுகளை பதிவுகளில் இருந்து அழித்துவிட்டு சந்தோஷமான தருணங்களைக் கொண்ட இந்த நிமிடத்திற்காக வாழுங்கள் என்கின்றனர் உளவியலாளர்கள். இது மன அழுத்தம் ஏற்படுவதை தடுக்கும் என்கின்றனர் உளவியலாளர்கள்.