மதிய உணவு சாப்பிட்டாச்சா? மறந்து போய் கூட இதெல்லாம் பண்ணிடாதீங்க!

0
1398

ஆரோக்கிய உணவுகள் உட்கொண்டாலும் அது நன்றாக செரிமானம் ஆகி உடலுக்கு சத்துக்களை அளிக்க வேண்டும், அப்போது தான் நாம் நோயின்றி வாழ முடியும்.

முக்கியமாக உணவு உண்டபின் ஒரு சில செயல்களை செய்யக்கூடாது, அவை என்னவென்றால்,

சிகரெட் பிடிப்பதே ஆபத்து தான், அதுவும் உணவு உண்டபின் செய்தால் அது 10 சிகரெட்டுக்கு சமமாம், எக்காரணம் கொண்டும் உணவு உண்டபின் சிகரெட் பிடிக்ககூடாது.
உணவை உட்கொண்டபின் பழங்களை சாப்பிட்டால், அது செரிமான மண்டலத்தில் பெரும் பிரச்சனைகளை ஏற்படுத்திவிடும், வயிறு உப்புசத்திற்கு வழிவகுத்துவிடும்.
இதேபோன்று டீயை அருந்தினாலும் இரும்புச்சத்து குறைபாடு ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளது, சூடான நீரை பருகுவது நல்லது.

மதிய உணவுக்கு பின்னர் குட்டி தூக்கம் போட்டால் தொப்பை வந்துவிடும் என பலரும் சொல்லக் கேள்விப்பட்டிருப்போம், இதுவும் செய்யக்கூடாத ஒன்று தான். ஏனெனில் நாம் உறங்கும் போது இரைப்பையில் உற்பத்தியாகும் செரிமான நீர் அப்படியே உணவுக்குழாய் வழியே மேலே எழும்பி, நெஞ்செரிச்சலால் அவஸ்தைப்படக்கூடும், மேலும் உணவை உட்கொண்ட உடனேயே குளிக்ககூடாது.

Previous articleரோட்டுக் கடைகளில் காளான் சாப்பிடுபவர்களா நீங்கள் அப்டினா இது உங்களுக்குத்தான்.
Next articleஉருளைக்கிழங்கு தோல் உடல் எடையை குறைக்கிறதா!