மகிழ்ச்சியான தகவல் ஒன்று! புலம்பெயர் நாடுகளில் வாழும் இலங்கையர்களுக்கு!

0

புலம்பெயர் நாடுகளில் வாழும் இலங்கையர்களுக்கு இரட்டை பிரஜாவுரிமை வழங்குவதன் மூலம் பல நன்மைகளை பெற்றுக்கொள்ள முடியும் என அமைச்சர் எஸ்.பி.நாவின்ன தெரிவித்துள்ளார்.

நாட்டை விட்டு வெளியேறி வேறு நாடுகளில் வசிப்போர் இலங்கைப் பிரஜாவுரிமை பெற்றுக்கொள்வதன் மூலம் நாட்டின் அபிவிருத்திக்குப் பங்களிப்புச் செய்ய முடியும்.

பிரஜாவுரிமையினை பெற்றுக்கொண்டவர்கள் வெளிநாடுகளிலேயே வசிக்காமல், அனைத்துத் துறைகளிலும் நாட்டின் மேம்பாட்டிற்குப் பங்களிப்புச் செய்ய வேண்டும் என அமைச்சர் கோரிக்கை விடுத்தார்.

இலங்கையை பூர்வீகமாக கொண்ட நிலையில், புலம்பெயர் நாடுகளில் வாழும் ஒருதொகுதியினருக்கு இன்று பிரஜாவுரிமை வழங்கி வைக்கப்பட்டது.

இது தொடர்பான நிகழ்வு இன்று பத்தரமுல்லையில் உள்ள குடிவரவு, குடியகல்வு திணைக்களத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இந்த கருத்துக்களை வெளியிட்டார்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஇந்திய பிரஜைக்கு வருமானம் எங்கிருந்து வந்தது? சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள சதித்திட்டம்!
Next articleபொலிஸார் தீவிர விசாரணை! இலங்கை கிரிக்கெட் வீரரின் ஆபாச காணொளி!