மகள் வயது சிறுமியை திருமணம் செய்ய துடிக்கும் 35 வயது நபர்!

0

தமிழகத்தில் 17 வயது சிறுமியை திருமணம் செய்வதற்கு 35 வயது நபர் இரண்டு ஆண்டுகளில் மூன்று முறை கடத்தியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி பகுதியைச் சேர்ந்த தம்பதி முருகன் (38)-இளமதி(34). இவர்களுக்கு லதா(17) என்ற மகள் உள்ளார்.

இந்நிலையில் சென்னை குரோம் பேட்டை பகுதியைச் சேர்ந்த இவரது உறவினர் ஒருவர் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் இவர்களின் வீட்டிற்கு வந்துள்ளார்.

அப்போது லதாவைக் கண்டவுடன் லதாவை எனக்கு திருமணம் செய்து வைக்கும் படி அவரது தாயாரான இளமதியிடம் கேட்டுள்ளார்.

மணிகண்டனுக்கு ஏற்கனவே திருமணமாகி மூன்று பிள்ளைகள் உள்ளனர். அதுமட்டுமின்றி அவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன.

நீ இப்படி இருக்கையில் நான் எப்படி என் மகளை உனக்கு திருமணம் செய்து வைக்க முடியும், அதுமட்டுமின்றி அவள் உனக்கு மகள் மாதிரி என்று இளமதி கூறியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த மணிகண்டன் லதா பள்ளிக்கு சென்ற போது அவரை காரில் கடத்திக் கொண்டு சென்றுள்ளார். இது குறித்து பொலிசில் புகார் அளித்தும் அவர்கள் அலட்சியப்படுத்தியதால், பெற்றோர் நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளனர்.

அதன் பின் பொலிசார் லதாவை மீட்டு குடும்பத்தாரிடம் ஒப்படைத்துள்ளனர். மணிகண்டனும் தூரத்து உறவினர் என்பதால் பெற்றோரும் பெரிய அளவில் பொலிசாரிடம் புகார் அளிக்கவில்லை.

இதை சாதகமாக்கிக் கொண்ட மணிகண்டன் மீண்டும் அந்த சிறுமியை கடந்த மார்ச் மாதம் கடத்தியுள்ளான். மீண்டும் பொலிசாரிடம் புகார் அளித்தும் அலட்சியக் காட்டியதால், நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்துள்ளனர்.

அதன் பின் மணிகண்டனையும் லதாவையும் மீட்டனர். மணிகண்டனுக்கு 1 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டது. சிறுமியும் காப்பகத்தில் வளர்க்கப்பட்டு வந்தார். மகளின் பிரிவை தாங்கமல் இளமதி மீண்டும் மகளை தன் வீட்டிற்கு அழைத்து வந்து படிக்க வைத்து வந்துள்ளார்.

தற்போது 12-ஆம் வகுப்பு படித்து வரும் லதாவை கடந்த மார்ச் மாதம் சிறையிலிருந்து வெளியில் வந்த மணிகண்டன் மீண்டும் நான்கு பேருடன் கடத்தியுள்ளான்.

இது குறித்து பெற்றோர் புகார் அளித்தும் பொலிசார் எந்த வித நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் மகள் கடத்தப்பட்டு 16 நாட்கள் ஆகிவிட்டதாக கூறி அவர்கள் கண்ணீர் வடித்துள்ளனர்.

இதனால் பொலிசாரோ இரண்டு தனிப்படைகள் அமைத்து மணிகண்டனை தேடி வருவதாக கூறியுள்ளனர்.

மேலும் சாதாரண ஏழைக் குடும்பம் என்பதால் மிகப் பெரிய அநியாயம் நடப்பதாகவும், மணிகண்டனின் இந்த துணிச்சலுக்கு பொலிசாரே காரணம் தான் எனவும், அவர்கள் உரிய நடவடிக்கை எடுத்திருந்தால் இந்த அளவிற்கு வந்திருக்குமா என்று உறவினர்கள் கூறி வருகின்றனர்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleநேற்றைய தினம் புதுக்குடியிருப்பு பகுதியில் மரணமான ஒருவர் தொடர்பில் வெளிவரும் உண்மைகள்!
Next articleஆஷிபாவை கொன்றது சரிதான்: கேரள வாலிபரின் சர்ச்சை பதிவு!