டிக் டாக் செயலி தற்போது இன்றைய இளைஞர்கள் மத்தியில் பெரும் சவாலாக உள்ளது. இந்த செயலியை பயன்படுத்தும் ஒவ்வொருவரும் தங்களை ஒரு கதாநாயகன், கதாநாயகி என நினைத்து கொள்ளும் அளவிற்கு புகுந்து விளையாடுகிறார்கள்.
தற்போது டிக் டாக் ஒன்றில் பெண் ஒருவர் தனது மகளுக்கும், கணவருக்கும் உணவு சமைத்து வைத்திருக்கிறார். கணவர் விரும்பி சாம்பிடும் அந்த உணவினை மகள் வேண்டாம் என்று ஒதுக்குகிறார்.
ஆனால் கணவருக்கு ஏற்பட்ட ஐடியாவையும், கடைசியில் அந்த சிறுமி குறித்த உணவினை ஆசையாகவும், வேகமாகவும் சாப்பிடுவதைக் காணலாம்.
இன்றைய சிறுவர்கள் வீட்டில் சமைத்து வைத்திருக்கும் உருளைக்கிழங்கினை விட கடையில் French Fries என்ற பெயரில் உலாவரும் உணவையே விரும்பி சாப்பிடுகின்றனர்.
ஆனாலும் இந்த தந்தை செய்தது சற்று முகம்சுழிக்கவும் வைத்துள்ளது. மகள் சாப்பிட வேண்டும் என்பதற்காக குப்பைத் தொட்டியில் இருந்து எடுத்தா அந்த கவரைப் பயன்படுத்துவது? என்ற கேள்வி காண்பவர்களுக்கு நிச்சயம் எழும்.