மகளின் கண்ணீர் தகவல்! மகளை அறையில் அடைத்து வைத்து பலாத்காரம் செய்த கொடூர தந்தை!

0

பெற்ற மகளை தொடர்ந்து 16 மாதங்கள் துஷ்பிரயோகம் செய்த தந்தைக்கு 13 ஆண்டுகள் சிறை தண்டனை அளித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

இங்கிலாந்தின் கிழக்கு சசெக்ஸின் ஹஸ்டிங்ஸ் பகுதியில் வசித்து வருபவர் ஸ்டெபானி (17).

தனது 5 வயது முதலே தாம் தத்தெடுக்கப்பட்டது தெரியவந்தது என கூறும் அவர் தனது 14 வது பிறந்த நாள் அன்று தனது உண்மையான பெற்றோர்கள் எழுதிய கடிதங்களை தன்னை தத்து பெற்றோர் பரிசாக அளித்தார்கள் எனக் கூறியுள்ளார்.

அப்போது இருந்து தமக்கு உயிர் தந்த பெற்றோர்கள் தொடர்பில் தகவல் திரட்ட முயன்றதாக குறித்த பெண் கூறியுள்ளார். அத்தோடு பேஸ்புக் மூலம் தமது தந்தையின் முகவரியை கண்டுபிடித்துள்ளார்.

ஆனால் தமது தந்தையும் தாயும் கருத்துவேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்வதையும், தம்மை தத்துப்பிள்ளையாக கைவிட்டதில் வருந்துவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனால் ஸ்டெபானியும் தந்தை பாரி ஜாக்சனும் பிரியாத அளவுக்கு நெருக்கமாகினர். தொடர்ந்து தமது குடியிருப்புக்கே ஸ்டெபானியை அழைத்து வந்துள்ளார் ஜாக்சன்.

பானியின் 15 வது பிறந்த நாளுக்கு 3 நாட்கள் முன்பு அந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது.

கொடூர தந்தை

2015 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் மாலை மது போதையில் குடியிருப்புக்கு திரும்பிய ஜாக்சன், தமது மகள் ஸ்டெபானியை வலுக்கட்டாயமாக முத்தமிட முயன்றுள்ளார்.

அதற்கு மறுப்பு தெரிவித்த அவரை இழுத்துச் சென்று நடு கூடத்தில் வைத்து பலாத்காரம் செய்துள்ளார். உணர்வற்று கிடந்த தன்னிடம் ஒரு வார்த்தை கூட பேசாமல் தந்தை மாடியில் உள்ள தமது அறைக்கு நடந்து செல்வதை கண்ணீருடன் பார்த்ததாக ஸ்டெபானி பின் பதிவு செய்துள்ளார்.

அடுத்த நாள் காலையில் இது தொடர்பில் விவாதித்த மகளை கொலை செய்து விடுவதாக ஜாக்சன் மிரட்டியுள்ளார்.

இதைத் தொடர்ந்து நீண்ட 16 மாதங்கள் நரக வேதனை அனுபவித்ததாக கூறும் ஸ்டெபானி, எப்போதெல்லாம் தேவையோ அப்போதெல்லாம் தம்மை துஸ்பிரயோகம் செய்தார் எனக் கூறியுள்ளார்.

அந்த 16 மாதங்களும் அறைக்குள் தன்னைப் பூட்டி வைத்துவிட்டு அவர் பணிக்கு செல்வதாகவும், அவரை மீறி தன்னால் எதையும் செய்துவிட முடியாதபடி சிறை வைத்தார் என்றும் ஸ்டெபானி தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் இனிமேல் தந்தையின் பாலியல் இச்சைக்கு இரையாக முடியாது என முடிவு செய்த ஸ்டெபானி, 2017 ஜனவரி மாதம் தமக்கு நேர்ந்த கொடுமைகள் குறித்து முதன் முறையாக பொலிசாருக்கு தகவல் அளித்துள்ளார்.

வழக்கம்போல அன்றும் ஸ்டெபானியிடம் வலுக்கட்டாயமாக நெருங்கிய ஜாக்சனை பொலிசார் சம்பவயிடத்தில் வைத்து கைது செய்துள்ளனர்.

இந்த வழக்கின் விசாரணை முடிவுக்கு வந்த நிலையில் இந்த ஆண்டு பெப்ரவரி மாதம் 13 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஇயற்கை வயக்ரா தர்பூசணி என்று உங்களுக்கு தெரியுமா!
Next articleதிருமண யோகம் தரும் பரிகார பூஜையை செய்வது எப்படி!