பூப் பறிப்பதற்காகச் சென்று நீர் நிரம்பிய குழியில் வீழ்ந்த மகனை காப்பாற்றுவதற்காகச் சென்ற தாய் உயிரிழந்த பரிதாப சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
பிங்கிரிய பகுதியில் கடந்த முதலாம் திகதி மாலை இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவத்தில் தாயும் மகனும் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர்.
குறித்த சம்பவத்தில் 32 வயதான நதிக்கா குமாரி என்ற தாயும் 8 வயதான சயுரு என்ற மகனுமே உயிரிழந்துள்ளனர்.
நதீகா என்ற தாய் கீரை பிடுங்குவதற்காக குறித்த பகுதிக்கு சென்றதுடன் மகன் பாடசாலைக்கு நாள்தோரும் பூ தட்டு கொண்டு செல்வது வழக்கம் இதன் பொருட்டு பூக்கள் பறிப்பதற்காக நீர் நிரம்பிய குழியில் இறங்கியுள்ளனர். இதன் போது இதில் நீர் நிரம்பியிருந்தமையால் சிறுவன் சுழியில் சிக்கியதை அவதானித்த தாய் காப்பாற்றுவதற்காக சென்ற போது தாயும் மகனும் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
குறித்த சம்பவத்தில் உயிரிழந்த தாய் மற்றும் மகனின் சடலத்தை குளியாப்பிட்டி வைத்தியசாலையில் பிரேத பரிசோதனை நிறைவடைந்த நிலையில் சடலங்கள் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.