போலீசில் புகார் அளித்த கோட்டல் நிர்வாகம். கொலை மிரட்டல் விட்ட மீரா மிதுன்!

0

போலீசில் புகார் அளித்த கோட்டல் நிர்வாகம்… கொலை மிரட்டல் விட்ட மீரா மிதுன்!

பிக்பாஸ் மீரா மிதுன் மீது சென்னை போலீசார் இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளார்கள் என்ற தகவல் வெளிவந்துள்ளது. நடிகை மீரா மிதுனை பற்றி வெளிவந்துள்ளது. வேண்டாம். எல்லாருக்குமே தெரியும் பிக் பாஸ் நிகழ்ச்சியிலேயே பார்த்திருப்பீர்கள். மேலும், பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்தவுடன் மீரா மிதுன் பற்றி பல விமர்சனங்கள் சமூக வலைத்தளங்களில் எழுந்த வண்ணம் உள்ளன. அதிலும் சமீப காலமாகவே தமிழக அரசையும், தமிழக போலீசாரையும் மீரா மிதுன் கடுமையாக விமர்சித்து வருகிறார். மேலும், நடிகை மீரா மிதுன் மீது சமூக வலைத்தளங்களில் வரும் பல விமர்சனங்களும்,புகார்களுக்கும் சென்னை போலீசார் எந்த நடவடிக்கை எடுக்கவில்லை என்றும்,குற்றவாளிகளிடம் இருந்து லஞ்சம் வாங்கி கொண்டு அவர்களுக்கு உதவி செய்வதாக குற்றம் சாட்டி வருகிறார்.

மேலும்,நடிகை மீரா மிதுனின் பாதுகாப்பிற்காக எந்த ஒரு நடவடிக்கை எடுக்காத காரணத்தினால் சென்னையில் உள்ள ஒட்டுமொத்த போலீசையும் டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என இந்திய பிரதமர் மோடியிடம் ட்விட்டரில் புகார் அளித்துள்ளார். இந்த செய்தி தமிழகத்தை மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்தியாவையும் பரபரப்பாக்கியது. இந்த நிலையில் கடந்த வாரம் நடிகை மீரா மிதுன் அவர்கள் சென்னையில் எக்மோரில் உள்ள ஒரு ஹோட்டலில் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி ஒன்று அளித்தார். அந்த பேட்டியில் அவர் பேசியது, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை.நான் தமிழகத்தில் தங்க முடியாத அளவிற்கு பிரச்சனைகள் அதிகமாக இருக்கிறது.

நான் என்னுடைய பாதுகாப்பிற்காக தமிழகத்தை விட்டு வேறு ஒரு மாநிலத்திற்கு சென்றால் தான் நிம்மதியாக வாழ முடியும் என்ற அளவிற்கு பிரச்சனைகள் தலைவிரித்து ஆடிக் கொண்டிருக்கிறது. இதையும் பாருங்க : அமலாபாலின் காதலர் இவர் தானா ? வைரலாகும் புகைப்படம். மேலும், தமிழக அரசும் காவல்துறையும் எனக்கு பாதுகாப்பு அளிக்கவில்லை. அதுமட்டுமில்லாமல் தமிழகத்தில் எனக்கு பாதுகாப்பு இல்லாத காரணத்தினால் தான் நான் மும்பையில் குடியேறி விட்டேன். மேலும், எங்கு சட்டம், ஒழுங்கு சரியாக நடக்கிறதோ? அங்கு தானே பாதுகாப்பு இருக்க முடியும். மேலும், நான் மும்பையில் தான்மிக பாதுகாப்பாக உணருகிறேன். இதனைத்தொடர்ந்து காவல் துறை லஞ்சம் வாங்கிக்கொண்டு செயல்படுவதாகவும், எந்த ஒரு குற்றச்சாட்டும் இல்லாமல் என் மீது வழக்கு பதிவு செய்கிறார்கள் என்றும் குற்றம் சாட்டி வருகிறார்.

இப்படி நடிகை மீரா மிதுன் தமிழக அரசுக்கும், காவல்துறைக்கும் எதிராக பேசுவதை பார்த்த ஹோட்டல் நிர்வாகத்தினர் செய்தியாளர்கள் சந்திப்பு முடிந்ததும் இதுபோன்ற சர்ச்சைக்கு உரிய கருத்துக்களை பேச வேண்டாம் என நடிகை மீரா மிதுனுக்கு அறிவுரை கூறினார்கள். ஆனால், நான் அப்படி தான் பேசுவேன் என ஓட்டல் ஊழியர்களிடம் வாக்குவாதம் செய்தார் மீரா மிதுன். மேலும்,மீரா மிதுன் ஹோட்டல் ஊழியர்களை கூட விட்டு வைக்கவில்லை தகாத வார்த்தைகளால் திட்டியதோடு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து ஹோட்டல் நிர்வாகத்தினர் மிரட்டியதாக ஹோட்டல் பணியாளர் அருண் என்பவர் அளித்த புகாரின் மீது 2 பிரிவுகளில் எழும்பூர் போலீசார் மீரா மிதுன் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். ஆனால், இது பொய்யான தகவல் என்று மீரா மிதுன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். ஏற்கனவே இரண்டு வழக்குகள் நிலுவையில் உள்ளது என குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous article14 வயதில் நடிக்க வந்த ராதாவின் மகளா! என்ன இப்போ இப்படி இருக்காங்க…
Next articleகமலை மட்டும் பேட்டி எடுக்கவே மாட்டேன் என்று சொன்ன டிடி, அவருது பிறந்தநாள் அன்று இப்படி சொல்லிட்டாரே டிடி!