பிரபல தொலைக்காட்சி மூலம் தொகுப்பாளினியாக களமிறங்கி மக்கள் மத்தியில் அதிகளவில் பிரபலமடைந்தவர் டிடி என்றழைக்கப்படும் திவ்ய தர்ஷினி.
கடந்த 20 வருடங்களாக சின்னத்திரையில் வெற்றிகரமாக நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார் இவர்.
நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குதல், விருது விழாக்கள், போட்டியில் நடுவர், ஒருசில சினிமாக்களில் முக்கிய வேடம் என அசத்தியுள்ளார் டி டி. அவருக்கு சமீபத்தில் கூட 20 வருடங்கள் சின்னத்திரையில் கலக்கியவர் என்று ஒரு அங்கீகாரமும் கொடுக்கப்பட்டது.
இவர், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் என்கிட்ட மோதாதே என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகின்றார்.
இந்நிலையில் இந்த வார நிகழ்ச்சியில் டி ஜே டிடி புகழ்வது போன்ற பாடலை போடுகிறார். உடனே கேமரா மேனும் கேமராவை அவர் அருகில் கொண்டு வருகிறார். உடனே டிடியும் ஏம்பா இப்படி பண்றீங்க என்று வெட்கப்படுகிறார்.