பொய் பேசுபவர்களை துரத்திக் கொள்ளும் 10கி.மீ நீளமுள்ள பாம்பு… நம்பமுடியாத உண்மை!

0

முதலில் இயற்கை வழிபாட்டு முறையினை தொடங்கிய மனிதன், படிப்படியாக விலங்குகளை வழிபடத் தொடங்கினான். அவற்றில் பைரவர், நந்தி உள்ளிட்ட பிற விலங்கு வழிபாடுகளை விடவும், நாக வழிபாடு பெரும் புகழ்பெற்றது ஆகும். சிவபெருமான் கழுத்தில் வாசுகி என்ற பாம்பை ஆபரணமாகவும், பிற பாம்புகளை கைகளில் ஆபரணமாகவும் தரித்துள்ளது இதற்கு ஓர் எடுத்துக்காட்டாகும். திருமால் பாற்கடலில் ஆதிசேசன் என்ற பாம்பினை படுக்கையாக வைத்துள்ளார்.

தென் இந்தியாவில் பாம்பு வழிபாடு அம்மன் வழிபாட்டுடன் இணைந்து நடைபெறுகிறது. இதில் பல நாகக் கோவில்களில் சிலிர்ப்பூட்டும் ஓர் வரலாறும், பின்னியும் இருக்கும். அவ்வாறாகத் தமிழகத்தில் வடகிழக்கு பகுதியில் அமைந்துள்ள ஒரு கோவிலில் தான் இந்தியாவிலேயே மிக நீண்ட பாம்பு சிலை அமைந்துள்ளது. அது எங்கே உள்ளது? எப்படி உள்ளது என பார்க்கலாம் வாங்க.

இந்தியாவில் விழுப்புரம் மாவட்டம், திருவமதூர் அடுத்து, தும்பூர் அருகே அமைந்துள்ளது அருள்மிகு நாக கன்னி அம்மன் கோவில். தேசிய நெடுஞ்சாலை 38-யில் சுமார் 14 கிலோ மீட்டர் பயணித்தால் இதனை அடையலாம். விக்கிரவாண்டியில் இருந்து குறிச்சிபாடி, ஒரத்தூர் வழியாக 12 கிலோ மீட்டர் தொலைவில் இக்கோவில் அமைந்துள்ளது.

சித்திரை மாதங்களில் இக்கோவிலில் திருவிழா கொண்டாடப்படுகிறது. இதில், பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளுடன் நீராட்டு விழா, பூச்சட்டி, பால்குடம் எடுத்தல் உள்ளிட்ட பல்வேறு வழிபாடுகளில் பெண்கள் ஈடுபடுகின்றனர்.

பிற கோவில்களைப் போல் வாரத்தில் அனைத்து நாட்களும் இந்தக் கோவில் திறக்கப்படுவதில்லை. செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக் கிழமைகளில் மட்டும் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை நடை திறக்கப்படுகிறது. பிற நாட்களில் காலையும், மாலையும் சிறிது நேரம் மட்டுமே கோவில் திறக்கப்படுகிறது.

நாக தோஷம் உள்ளவர்கள் இக்கோவிலுக்கு வந்து வழிபடுவதன் மூலம் பலன் கிடைக்கும். ராகு, கேது தோஷம் நீங்கவும் இங்கு பிரார்த்தனை செய்கின்றனர்.

வேண்டியவை நிறைவேறியதும் கோவில் திருவிழாவிற்காகப் பொருளுதவியும், நிதி உதவியும் வழங்கப்படுகிறது. அன்னதானம் இட்டும் நேர்த்திக்கடன் நிறைவேற்றப்படுகிறது.

தமிழகத்தில் பெரும்பாலான பகுதிகளில் காணப்படும் உயரமான சுவாமி சிலைகளையே நாம் வியப்புடன் காண்பது வழக்கம். ஆனால், தும்பூரில் அமைந்துள்ள இந்த நாககன்னியம்மன் கோவிலில் மூலவராக உள்ள பாம்பு சிலை சுமார் 10 கிலோ மீட்டர் தூரம் வரை நீண்டு காணப்படுவது இத்தலத்தின் தனிச்சிறப்பாகும். இன்று அந்தச் சிலை முழுமையாகக் காணக்கிடைக்காவிட்டாலும் தலையை ஒரு இடத்திலும், உடல் பகுதியை ஒரு இடத்திலும், வாலை பத்து கிலோ மீட்டர் தொலைவில் வேறொரு இடத்தில் காண முடிகிறது. இங்குள்ள திருவட்டப்பாறை மீது ஏறி யாரேனும் பொய் கூறினால் அவர்களது பார்வை பறிபோய்விடும். அவன் பாம்பு கடித்து உயிரிழப்பான் என்பது தொன்நம்பிக்கை. தமிழகத்தில் நாகர்கோவிலில் உள்ள நாகராஜ கோயிலில் தான் பாம்பு மூலவராக உள்ளது என நாம் அறிந்திருப்போம். ஆனால் தும்பூரில் உள்ள கோவிலிலும் பாம்பே மூலவராக உள்ளது. நாகர் கோவிலில் நாக ராஜாவாகவும், விழுப்புரத்தில் நாக கன்னியாகவும் வழிபடப்படுகின்றது.

ஒரு காலத்தில் இப்பகுதியை ஆட்சி செய்து வந்த அரசரின் முன்னிலையில் வழக்கு ஒன்று நடைபெற்றது. அண்ணனுக்கும், தம்பிக்கும் இடையேயான வழக்கில் அண்ணன் திருவட்டப்பாறை மீது ஏரி பொய் கூறினான். பின் பாறையின் அடிப்பகுதியில் இருந்து வெளியே வந்த பாம்பு அவனை நீண்ட தூரம் துரத்திச் சென்று கொன்றது. அந்த இடமே தும்பூர். இங்கே பாம்பின் தலையும், வயல் பகுதியில் உடல் பகுதியும், இங்கிருந்து 10 கிலோ மீட்டர் தொலைவில் ஆமத்தூர் முத்தாம்பிகையின் உடலில் பாம்பின் வால் பகுதி சுற்றிய நிலையிலும் பார்க்க முடிகிறது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleதினமும் சிறுநீர் கழிக்கும் போது இதனை கவனியுங்கள்? தடுக்கா விட்டால் ஆபத்து நிச்சயம்!
Next articleஅந்த மூன்று நிமிட வீடியோ: நிர்மலா தேவி விவகாரத்தில் புயலை கிளப்ப போகும் ஆதாரம்!