பொடுகு பிரச்சினைக்கு பலரும் அறியாத ஒரு தீர்வு!

0

பொடுகு பிரச்சினைக்கு பலரும் அறியாத ஒரு தீர்வு!

பொதுவாக ஆண்கள், பெண்கள் என இருபாலாருக்கும் தலைமுடி பிரச்சினைகள் மற்றும் பொடுகு பிரச்சினைகள் காணப்படும்.

இது போன்ற பிரச்சினைகள் முறையான பராமரிப்பு இன்மை, தேவையற்ற இரசாயனப்பொருட்கள் பயன்பாடு மற்றும் ஊட்டச்சத்து குறைப்பாடு போன்றவைகளால் ஏற்படும்.

இதனை சிறந்த பராமரிப்பு மற்றும் ஆரோக்கியமான உணவு பழக்கவழக்கங்களாலும் கட்டுபடுத்தலாம். அந்த வகையில் வேப்பிலையை கொண்டு எவ்வாறு தலைமுடியை பராமரிக்கலாம் தொடர்பில் தெரிந்து கொள்வோம்.

ஒரு கையளவு வேப்பிலையை எடுத்து, நீரினுடன் சேர்த்து நன்கு கொதிக்க விடவேண்டும். பின்னர் அந்த வேப்பிலைகளை எடுத்து அரைத்து பேஸ்ட் போன்று செய்து, தலையில் தடவி குளிக்க வேண்டும். இவ்வாறு செய்வதனால் தலைமுடி சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை கட்டுபடுத்த முடியும்.

அரைத்த வேப்பிலை பேஸ்ட்டுடன் முட்டையின் வெள்ளைக்கருவை சேர்த்து தலையில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து குளிக்க வேண்டும். இதனை வாரத்திற்கு இரண்டு முறை செய்ய வேண்டும். இதனால் தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைப்பதோடு முடி பளப்பளப்பாக காணப்படும்.

தொடர்ந்து பொடுகு பிரச்சினைக்கு, ஒரு கையளவு வேப்பிலையை நீரில் போட்டு கொதிக்க விட்டு, அந்நீரை வடிகட்டி, அந்த நீரைக் கொண்டு தலைக்கு குளிக்கும் போதெல்லாம் இந்நீரையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

தலைமுடி உதிர்வு பிரச்சினைகளுக்கு, வேப்பிலையில் வெயிலில் உலர்த்தி, பின் அதனை பொடி செய்து, காற்று உட்செல்லாத வகையில் ஒரு டப்பாவில் போட்டு வைத்துக் கொள்ள வேண்டும். இதனை தலைக்குளிக்கும் போதேல்லாம் நீர் கலந்து பயன்படுத்த வேண்டும்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleநீரிழிவு நோயாளிகள் மஞ்சளை அதிகமாக சேர்க்கக்கூடாது!
Next articleபிரச்சனைகளுக்கு தீர்வளிக்கும் கறிவேப்பிலை டீ தயாரிக்கும் முறை!