பொடுகு குளிர்காலத்தில் எல்லாருக்குமே பிரச்சனை தரக் கூடியது. பொடுகிற்கு காரணம் அதிக வறட்சி, குளிர்காலம், எண்ணெய் இல்லாத கூந்தல், மற்றொருவரின் சீப்பு, துண்டு என உபயோகிப்பது என பல காரணங்கள் சொல்லிக் கொண்டு போகலாம்.பொடுகுகள் இருந்தால் தலையில் அரிப்பு ஏற்படும்.
அதனால் தொடர்ச்சியாக தலையை சொரியும் போது எண்ணைச் சுரப்பிக் கொப்புளம் உண்டாகும். இயற்கை முறையில் பொடுகினை ஒழிக்க முற்படுவதே, சிறந்த வழி. இதனால் பொடுகு நீங்குவதோடு, கூந்தலும் நன்கு ஆரோக்கியமாக பொலிவோடு காணப்படும்.
வேப்பிலை மற்றும் ஆலிவ் எண்ணெய்
வேப்பிலை எண்ணெய் – கைப்பிடி அளவு
ஆலிவ் எண்ணெய் – 4 டேபிள் ஸ்பூன்
தயாரிக்கும் முறை:
வேப்பிலையை அரைத்து வைத்துக் கொள்ளுங்கள். குறைவான தீயில் ஆலிவ் எண்ணெயை சூடேற்றி அதில் வேப்பிலை விழுதை போடுங்கள்.
பின்னர் கிளறிக் கொண்டு இருக்குங்கள். சலசலப்பு அடங்கியவுடன் அடுப்பை அணைத்து விடவும். இந்த எண்ணெயை ஆறிய பின் வடிக்கட்டி உபயோகப்படுத்துங்கள். ஒரு நாள் விட்டு ஒரு நாள் எண்ணெயை தலையில் வைத்து குளிக்க வேண்டும். இப்படி செய்தால் ஒரே வாரத்தில் பொடுகு காணாமல் போய்விடும்.