பேரிடர் மேலாண்மை பயிற்சியின்போது கோவை மாணவி மாடியில் இருந்து விழுந்து இறந்தார்!! தக்க பாதுகாப்பு இல்லாமல் பயிற்சிகொடுத்த கல்லூரிதான் காரணம்!

0

பேரிடர் மேலாண்மை பயிற்சியின்போது கோவை மாணவி மாடியில் இருந்து விழுந்து இறந்தார்!! தக்க பாதுகாப்பு இல்லாமல் பயிற்சிகொடுத்த கல்லூரிதான் காரணம்.

கோவை தொண்டாமுத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நேற்று பேரிடர் மேலாண்மை பயிற்சி நடந்தது. இந்த பயிற்சியில் அந்த கல்லூரியில் பயிலும் மாணவி லோகேஸ்வரி
கலந்து கொண்டார். தீப்பிடிக்கும் சமயத்தில் எவ்வாறு கயிறைப் பிடித்துக்கொண்டு கீழே குதிக்கவேண்டும் என்ற பயிற்சிக்காக லோகேஸ்வரி அழைக்கப்பட்டார். இரண்டாம் மாடியில் இருந்து கீழே குத்திக்கும் பயிற்சி கொடுக்கப்பட்டது. தக்க பாதுகாப்பின்றி அந்த மாணவியை கீழே தள்ளிவிட்டார் அந்த கல்லூரியின் பயிற்சியாளர். அதில் லோகேஸ்வரியின் தலை முதல் தளத்தின் சன் ஷெட்டில் இடித்து சம்பவ இடத்திலேயே அவரது உயிர் பிரிந்தது.

இது தொடர்பாக அந்த பேரிடர் மேலாண்மை பயிற்சி அளித்த பயிற்சியாளர் ஆறுமுகம் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் குறித்து இறந்த மாணவியின் பெற்றோர்களுக்கு கல்லூரியிலிருந்த தகவல் தெரிவிக்கப்படவில்லை. தொலைக்காட்சியில் செய்தியைப்பார்த்துதான் நாங்கள் தெரிந்துகொண்டோம் என்று லோகேஸ்வரியின் தந்தை கண்ணீர் மல்க தெரிவித்தார்.

யாருடைய குற்றம் இது? யார் குற்றமாக இருந்தாலும் இறந்த அந்த பெண்ணின் குடும்பத்திற்குத்தான் இழப்பு… இவற்றை யார் கேட்பது?

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleதேனுடன் ஏலக்காய்தூள் கலந்து சாப்பிட்டு வருவதால் கிடைக்கும் நன்மைகள்!
Next articleவவுனியாவில் திடீரெனப் பற்றியது காட்டுத்தீ – 10 ஏக்கர் காணி சேதம்