பொடுகை விரட்ட இயற்கை டிப்ஸ்!

0

அருகம்புல்லின் சாறர தேங்காய் எண்ணெ‌யுட‌ன் காய்ச்சி ஆறவைத்துத் தலையில் தேய்த்து வந்தால் தலையில் அரிப்பு நீங்கி பொடுகு வராமல் காக்கும்.

நாட்டு மருந்து கடையில் காய்ந்த வேப்பம்பூ கிடைக்கும். உப்பு கலக்காத வேப்பம்பூ 50 கிராம் கேட்டு வாங்கி, அதை 100 கிராம் தேங்காய் எண்ணெயில் போட்டு நன்கு காய்ச்ச வேண்டும்.

இளம் சூடு பதத்திற்கு ஆறி,அதிகம் பொடுகு உள்ளவர்கள், வாரத்திற்கு ஒரு முறையோ, இரண்டு முறையோ, மூன்று வாரங்கள் குளித்தால் பொடுகு சுத்தமாக நீங்கி விடும்

தேங்காய் பால் – 1/2 கப்,

எலுமிச்சை சாறு – 4 தேக்கரண்டி,

வெந்தயம் சிறிதளவு

ஊறவைத்து அரைத்து மூன்றையும் ஒன்றாக கலந்து தலையில் தேய்த்து ஊறவைத்துக் குளித்து வந்தால் பொடுகுத் தொல்லை நீங்கும். கூந்தல் நுனி வெடிக்காமல் நீளமாக வளரும்.
பொடுகு வருவதை தவிர்க்க

ஒருவர் பயன்படுத்திய சீப்பு மற்றும் தலையாணை,துண்டு போண்றவற்றை அடுத்தவர் பயன்படுத்தக்கூடாது.
தலையை எப்பொழுதும் சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும்.

கொழுப்பு சத்துள்ள நெய், பால், வெண்ணெய் முதலியவற்றை உணவில் சேர்த்து கொள்ள வேண்டும். இதனால் தோலுக்கு தேவையான எண்ணெய் பசை கிடைக்கும். இதன் மூலம் பொடுகு வருவதை தவிர்க்க வேண்டும்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஅழகான கன்னங்கள் வேண்டுமா! அப்போ இதை ட்ரை பண்ணலாமே!
Next articleமுகத்தில் உள்ள ரோமங்களை நீங்குவதற்கு!