பெருங்குடல் புற்றுநோயை தடுக்கும் திராட்சைப் பழம்!

0

பெருங்குடல் புற்றுநோயை தடுக்கும் திராட்சைப் பழம்!

திராட்சைப் பழத்தில் உள்ள ஃப்ளேவனாய்டுகள் புற்றுநோய் ஏற்படுவதை தடுப்பதாக சமீபத்திய ஆய்வு முடிவில் கண்டறியப்பட்டுள்ளது. புற்றுநோய் வகையில் ஒன்றான பெருங்குடல் புற்றுநோயால் ஆண்டிற்கு 5 லட்சம் பேர் உலகம் முழுவதும் மரணமடைகின்றனர். இதனை சாதாரண திராட்சைப் பழம் தடுத்து விடுகிறதாம்.

தினசரி உணவில் கறுப்புத் திராட்சை சாப்பிட்டால் போதுமாம் பெருங்குடல் புற்றுநோய் ஏற்படுவதில்லை என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். திராட்சை ரசத்தில் 87.12 சதவிகிதம் தண்ணீரும், பொட்டாசியம் தாது உப்பும் இருக்கின்றன. இதுவே மருந்துப் பொருளாக செயல்படுகிறது.

பெருங்குடல் புற்றுநோய்

கலிபோர்னியா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் திராட்சைப் பழத்தில் இருந்து பிரித்து எடுக்கப்படும் ரெஸ்வெரட்ரோல் என்ற சத்துப்பொருள் 100 சதவிகிதம் பெருங்குடல் புற்றுநோயைக் குணப்படுத்தி விடுவதை ஆய்வு மூலம் கண்டறிந்துள்ளனர். பெருங்குடல் புற்றுநோயாளிகளுள் ஒரு பிரிவினருக்கு 20 மில்லி கிராம் ரெஸ்வெரட்ரோல் மாத்திரை தினமும் கொடுக்கப்பட்டது. இரண்டாவது பிரிவினருக்கு 120 கிராம் திராட்சைப் பழப்பொடியைத் தண்ணீரில் கலந்தும் அருந்தச் சொன்னார்கள்.

மூன்றாவது பிரிவினருக்கு 80 கிராம் திராட்சைப் பழப் பொடியை கலந்து அருந்தி வரச்சொன்னார்கள். சில நாட்களுக்குப் பின்னர் 80 கிராம் திராட்சைப் பழப்பொடியை அருந்தி வந்தவர்களுக்கு மட்டும் பெருங்குடல் புற்றுநோய் குறிப்பிட்ட அளவிற்கு குணமாகி இருந்தது. அதிக அளவு திராட்சைப் பழப் பொடியும், மாத்திரையும் சாப்பிட்டவர்களைவிட குறைந்த அளவு திராட்சைப் பழப்பொடி மிகுந்த ஆற்றலுடன் செயல்பட்டு குணப்படுத்தியுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆற்றலுடன் செயல்படும்

தினசரி 50 முதல் 100 கிராம் வரை திராட்சைப் பழங்களை மென்று உண்பதால் ரெஸ்வெரட்ரோல் எளிதில் கிடைக்கும். குறைந்த அளவே உண்பதால் திராட்சையில் உள்ள செயல்படும் கூட்டுப்பொருள் மிகுந்த ஆற்றலுடன் புற்றுநோயைத் தடுக்கிறது என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Previous articleவார ராசிப்பலன் – மார்ச் 3 முதல் 9 வரை !
Next articleஉடல் எடை கூடியவர்கள் தினமும் வெறும் வயிற்றில் சோம்பு தண்ணீர் குடியுங்கள்! சிறிய‌ சீரகம் உடல் எடையை குறைப்பத‌ற்கு சிறந்த தீர்வு!