பெண் சபலத்தால் வீழ்ந்த ராஜகோபால்… யார் இவர்? இறந்தது எப்படி?

0

சரவணபவன் உரிமையாளர் ராஜகோபால்(வயது 72) இன்று சென்னையில் காலமானார்.

தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவரது உயிர் பிரிந்தது. அவருக்கு வயது 72.

யார் இந்த ராஜகோபால்? சரவணபவன் தொடங்கியது எப்படி?
1947ம் ஆண்டு தமிழகத்தின் புன்னையடி எனும் கிராமத்தில் ஏழைக்குடும்பத்தில் பிறந்தவர் ராஜகோபால்.

வறுமை காரணமாக ஏழாம் வகுப்போடு படிப்பை நிறுத்தியவர் உணவகத்தில் டேபிள் துடைக்கும் வேலையை செய்தார், இரவில் அங்கேயே படுத்து தூங்கி நாட்களை கழித்தார்.

சிறிது நாளில் தேநீர் போட கற்றுக்கொண்டதுடன் மளிகை கடையிலும் வேலை செய்த அனுபவத்தால் சொந்தமாக மளிகை கடையை தொடங்கினார்.

தொழிலில் அதிக ஏற்ற இறக்கங்களை சந்தித்தாலும் 1981ம் ஆண்டு சரவண பவன் எனும் ஹொட்டலை தொடங்கினார்.

உணவின் தரத்திலும் வாடிக்கையாளர்களின் நல்ல அனுபவத்திலும் எந்த குறையும் வைக்கக் கூடாது என்பதில் முழு கவனம் செலுத்தினார் ராஜகோபால்.

இதனால் ஒவ்வொரு மாதமும் ரூ.10,000 அளவில் இழப்பு ஏற்பட்டாலும், உணவின் சுவை மக்களை சுண்டி இழுக்க லாபமாக மாறத் தொடங்கியது.

தன்னிடம் பணிபுரியும் ஊழியர்களுக்கு வேலையின் உறுதித்தன்மையை தருவதுடன் ஆண்டுதோறும் சிறப்பு விடுமுறை வழங்கி அவர்களது குடும்பத்தினருடன் நேரம் செலவழிக்க வாய்ப்பும் ஏற்படுத்தி கொடுப்பார்.

அயராத உழைப்பாலும், ஊழியர்கள் மீதான அக்கறையாலும் சரவண பவன் ஆலமரமாக வேறூன்றி வளர இந்தியாவின் பல இடங்களிலும், வெளிநாடுகளிலும் கிளைகளாக முளைத்தன.

கோடிக்கணக்கில் லாபம் கொட்டினாலும் ஏற்கனவே இரண்டு திருமணங்கள் செய்த ராஜகோபாலுக்கு மூன்றாவதாக ஜீவஜோதி என்பவரை மணக்க விரும்பினார்.

அவரை திருமணம் செய்தால் மென்மேலும் வளர்ச்சிகள் கிடைக்கும் என ஆஸ்தான ஜோதிடர் கூற முழுமூச்சில் இறங்கினார் ராஜகோபால்.

ஆனால் ஜீவஜோதிக்கோ சாந்தாரம் என்பவர் மீது காதல், இருவரும் திருமணம் செய்து கொண்டதால் ஆத்திரத்தில் இருந்த ராஜகோபால், சாந்தாராமை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டினார்.

இதன்படி சாந்தாராம் கடத்தப்பட்டு, சில நாட்களுக்குப் பிறகு மேற்குத் தொடர்ச்சி மலையில் அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது.

இந்த வழக்கில் கடந்த 2009ம் ஆண்டு ராஜகோபாலுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது, பின்னர், ராஜகோபால் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

ஜாமீனில் வெளிவந்த ராஜகோபால், இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.

தனக்கு உடல்நிலை சரியில்லை என்பதால் சிகிச்சைக்காக வெளிநாடு செல்ல வேண்டும்’ என நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்தார். அவர் வெளிநாடு செல்லவும் அனுமதி மறுக்கப்பட்டது.

அத்துடன் யூலை 7ம் திகதிக்குள் சரணடைய த்தரவிட்ட நிலையில், நீதிமன்றத்துக்கு வரும் போது ஆம்புலன்சில் வந்தவருக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற அனுமதி வழங்கப்பட்டது.

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலமானார்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஅண்ணாச்சி ராஜகோபாலின் கடைசி ஆசை என்ன தெரியுமா?.. மனவேதனையுடன் நிறைவேற்றிய ஊழியர்கள்..!
Next articleசரவணபவன் ராஜகோபால் கொலையாளியானது எப்படி? ஜீவஜோதியின் அன்றைய கண்ணீர் வாக்குமூலம் !