பெண்கள் நட்ஸ் சாப்பிடுவது நல்லதா! கெட்டதா!

0

பாதாம் முந்திரி, வால்நட், போன்ற நட்ஸ் வகைகள் மிகவும் காஸ்ட்லியானது என்றாலும் அதிலுள்ள சத்துக்கள் உயர்தரம் கொண்டவை. அதிக நார்சத்து, கால்சியம், பொட்டாசியம், விட்டமின் ஈ அகியவை கொண்டுள்ளது. அலர்ஜியை உண்டாக்கும் புரோட்டீனும் குறைந்த அளவு உள்ளது. அதோடு குறைந்த அளவு சோடியம் உள்ளது. இவ்வளவு நல்லவைகள் கொண்ட நட்ஸ் பெண்களுக்கு மிக மிக நல்லது.

நட்ஸ் தினமும் சாப்பிடும் பெண்கள் சாப்பிடாத பெண்களை விட ஆரோக்கியமாக இருப்பார்கள் என ஆய்வு தெரிவிக்கின்றது. தினமும் நட்ஸ் சாப்பிடும் பெண்களுக்கு கொலஸ்ட்ரால் குறைவாக உடலில் உள்ளது என ஆய்வு தெரிவிக்கின்றது. அதோடு இதனை தொடர்ந்து எடுத்துக் கொள்ளும் பெண்களுக்கு இதய நோய், புற்றுநோய் வருவதில்லை எனவும் தெரிய வந்துள்ளது.

எல்லா வகையான நட்ஸ் கலந்து சாப்பிடுவதால் அதிலுள்ள ஃபிடோகெமிக்கல், மினரல்கள், விட்டமின் உடலுக்கு நன்மைகளை தருகிறது. உடல் பருமனை ஏற்படாமல் தடுக்கிறது.

வால்நட்டில் ஒமேகா 3 அமினோ அமிலங்கள் உள்ளது. இவை இதயத்திற்கு நல்லது. அதேப்போல் பாதாமில் விட்டமின் ஈ அதிகம் உள்ளது. இவை தீய நச்சுகளை உடலிலிருந்து அழிக்கிறது. பிஸ்தாவில் செலினியம், லினோலியிக் அமிலம் ஆகியவை உள்ளது. இவை மூளையை வலுப்படுத்தும்.

மேலும் நட்ஸ் சாப்பிடுவதால் நல்ல கொழுப்பு அமிலங்கள் அதிகமாகிறது. இவை இதய நோய்களையும், ரத்த அழுத்தத்தையும் வர விடாமல் தடுக்கும். வாரம் 3 கப் அளவு நட்ஸ் சாப்பிட்டு வாருங்கள். எந்த வித நோய்களும் இல்லாமல் ஆரோக்கியமாக இருக்கும். குறிப்பாக பெண்களை தாக்கும் புற்றுநோய்கள் வரவிடாமல் தடுக்கலாம்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleகஷ்டங்கள் தீர ஒவ்வொரு ராசியினரும் இதை செய்தால் போதும்!
Next articleநல்ல கொழுப்பும்( HDL) உடலுக்கு ஆபத்தை தருமா! அதிர்ச்சி தகவல்!