பெண்கள் அணியும் நகைக்களுக்கான காரணம் தெரியுமா?

0

தமிழர் பாரம்பரிய நடவடிக்கைகள் மறைமுகமாக விஞ்ஞான கருத்துகளை கொண்டிருப்பவை. அதுபோல நகைகள் நம்முடைய உடல் ஆரோக்கியத்தைப் பேணுவதற்காக உருவானவை என்பதே உண்மை.நகைகள் அணிவதன் மூலம் நம் உடலில் உள்ள முக்கிய வர்மப் புள்ளிகளைத்தூண்டி நம் உடலின் ஒவ்வொரு உறுப்புகளையும் பராமரிக்கிறது.

தங்கம் எப்பொழுதும் நம் உடலை தொட்டுக்கொண்டிருப்பதால் நாளடைவில் உடலின் அழகை அதிகரிக்கும் ஆற்றலுள்ளது.அதாவது நமக்கு நோய்கள் உருவாவதை தடுப்பதற்கு மருந்துகளை உபயோகிப்பதை விட நகைகளை நாம் அணிந்தால் அது நல்ல பயன் தரும்.

தங்கத்தில் என்று இல்லாமல் (முத்து, வெள்ளி போன்றவற்றில்) நாம் நகை அணிதல் கட்டாயமாக இருந்தது நமது தமிழர் பாரம்பரியத்தில். அது நமது ஆரோக்கியத்தை முன் நிறுத்தியே ஆகும்.

தோடு அணிதல்‬:

மூளையின் செயல் திறன் அதிகரிக்கும்.கண்பார்வை திறன் கூடும்.

மோதிரம் அணிதல்

விரல்களில் அணியப்படும் மோதிரம் டென்ஷன் குறைக்கவும், இனிமையான பேச்சு திறன், அழகான குரல் வளம் என்பவற்றுக்கு உதவுகிறது.

மூக்குத்தி அணிதல்

மூக்குத்தி உடல் வெப்பத்தை குறைத்து குளிர்ச்சி அளிக்கும். மூக்கு மடலில் ஏற்படுத்தப்படும் துவாரம் நரம்பு மணடலத்தில் உள்ள அசுத்த வாயுவை அகற்றும். ஒற்றைத்தலைவலி, நரம்பு நோய்கள், உளச்சோர்வு ஏற்படமால் மூக்குத்தி தடுக்கிறது.

வளையல் அணிதல்

வளையல் அணிவதன் முக்கிய நோக்கம் ஹார்மோன்களின் குறைப்பாடுகளை களைவதாகும். பிறந்தது முதல் நமது உடலில் ஹார்மோன்களின் குறைப்பாடுகள் ஏற்பட்டுக்கொண்டே இருக்கும். அதனால் அக்காலத்தில் இறுதிவரை வளையல் அணிதல் கட்டாயமாக்கப் பட்டு இருந்தது.

கொலுசு‬ :

கல்லீரல்,மண்ணீரல்,பித்தப்பை,சிறுநீரகம், சிறுநீர்ப்பை,வயிறு போன்ற மிக முக்கிய உறுப்புகளின் செயல் திறனை தூண்டிவிடும் அற்புதமான அணிகலன் கொலுசு.கர்ப்பப்பை இறக்க பிரச்சனையை தடிமனான கொலுசு அணிவதன் மூலம் தீர்க்கலாம்.

ஒட்டியாணம்‬ :

ஒட்டியாணம் அணியும் போது இடுப்பு பகுதியின் சக்தி ஓட்டம் நன்றாக தூண்டப்பட்டு ஆரோக்கியம் கூடும்.வயிற்று பகுதிகள் வலு வடையும்.

செயின்‬ , ‪நெக்லஸ்‬

கழுத்தில் செயின் அணியும் போது உடலுக்கும் தலைக்கும் இடையே உள்ள சக்தி ஓட்டம் சீராகும் .

வங்கி‬ :

கையின் பூஜை பகுதியில் இறுக்கமான அணிகலன்கள் அல்லது கயிறுகள் அணியும் பொது உடலில் ரத்த ஓட்டம் சீராகி பதற்றம்,படபடப்பு ,பயம் குறைகிறது .மார்பக புற்று நோய் வருவது தவிர்க்க படுவதாக ஆய்விலே உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

இந்த பதிவை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்!

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஆண்களே தொங்கும் தொப்பையை கரைக்க வேண்டுமா?
Next articleகட்டை விரலில் மோதிரம் அணியக்கூடாது ஏன்?