பெண்களை தாக்கும் லுக்கேமியா பற்றிய தகவல்கள்!

0

பெண்களின் உடலமைப்பு ஆண்களை போன்றே இருந்தாலும் அவர்களுக்கு எழும் பிரச்சினைகள் ஆண்களிடம் இருந்து முற்றிலும் மாறுபட்டவை. அப்படி பெரும்பாலும் பெண்களுக்கு மட்டும் ஏற்படக்கூடிய ஒரு நோய்தான் லுக்கேமியா. இதனை பற்றி பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் இது ஏற்படுத்தும் பாதிப்பு மற்ற நோய்களை விட கொடியதாகும்.

லுக்கேமியா என்பது இரத்தத்தில் அல்லது எலும்பு மஜ்ஜையில் ஏற்படக்கூடிய புற்றுநோயாகும். எலும்பு மஜ்ஜைகள் தான் இரத்த அணுக்களை உற்பத்தி செய்கிறது. இரத்த அணுக்களின் உற்பத்தியில் பாதிப்பு இருக்கும்போது லுக்கேமியா ஏற்பட வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. இது லிகோசைட்டுகள், அல்லது வெள்ளை இரத்த அணுக்களை பாதிக்கிறது. இங்கே லுக்கேமியா பற்றி தெரிந்து கொள்ளவேண்டிய தகவல்களை பார்க்கலாம்.

லுக்கேமியா எலும்பு மண்டலத்தை தாக்கும். இதனால் உங்கள் உடல் அதிக அளவில் இரத்த வெள்ளை அணுக்களை உற்பத்தி செய்யும். உங்கள் உடல் பல லிம்போசைட்களை உற்பத்தி செய்தால் உங்களுக்கு லிம்போசைடிக் லுகேமியா அல்லது லிம்போபிளாஸ்டிக் லுகேமியா உள்ளது என்று அர்த்தம். ஒருவேளை கிரானூலோசைட்டுகளின் அதிகப்படியான உற்பத்திதான் பிரச்சனை என்றால் அது எலாக்டிக் லுக்கேமியா.

லுக்கேமியா குழந்தைகள் மற்றும் இளம்வயதினரை தாக்கக்கூடிய நோய் எனறு நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். ஆனால் உண்மையில் இது குழந்தைகளை விட இளம்வயதினரையே அதிகம் தாக்கக்கூடும். குறிப்பாக பெண்களுக்கு லுக்கேமியா ஏற்படுவதற்கான வாய்ப்புகள் மிகஅதிகம். உங்களுக்கு இதற்கான அறிகுறிகள் தெரிந்தாலும் அதனை சாதாரணமாக நினைத்து விட்டுவிடுகிறீர்கள் அதுதான் பின்னர் பெரிய ஆபத்தாய் முடிகிறது. குறிப்பாக மாதவிடாயின் போது ஏற்படும் அறிகுறிகளை அலட்சியமாக விட்டுவிடக்கூடாது.

அமெரிக்க புற்றுநோய் ஆய்வகத்தின் ஆய்வின்படி காய்ச்சல்தான் புற்றுநோயின் முதல் அறிகுறியாகும். ஆனால் இதில் உள்ள குழப்பம் என்னவென்றால் பல நோய்களுக்கும் காய்ச்சலே அறிகுறியாக இருப்பதால் நாம் பெண்கள் இதனை அலட்சியமாக விட்டுவிடுகிறார்கள். இந்த புற்றுநோய் உங்களுடைய நோயெதிர்ப்பு மண்டலத்தைத்தான் முதலில் தாக்கும், எனவே எளிதில் தொற்றுநோய் தாக்கிவிடும். காய்ச்சலை போலவே உடலில் சிவப்பு நிற தடிப்புகள் இருந்தாலும் அலட்சியமாக எண்ணாதீர்கள். இவைதான் லுக்கேமியாவின் முதல் அறிகுறி.

வேலைப்பளு அதிகம் உள்ள நாட்களில் நாம் இதனை அனுபவிக்கலாம். ஆனால் எதிர்பாராதவிதமாக இது லுக்கேமியாவின் அறிவுகுறியாகவும் இருக்கலாம். இவை மட்டுமின்றி பதட்டம், சுவாசக்குறைவு, மயக்கம், ஒற்றைத்தலைவலி போன்றவை கூட இதன் அறிகுறியாக இருக்கலாம்.

இரும்பு சத்து குறைபாடு ஆண்களை காட்டிலும் பெண்களை பெரிதும் பாதிக்கிறது. பெரும்பாலும் பெண்கள் ஊட்டச்சத்து பற்றாக்குறையால்தான் அனிமியா ஏற்படுகிறது என்று நினைக்கிறார்கள் ஆனால் உண்மையில் அனிமியா லுக்கேமியாவின் அறிகுறியாகும். முன்பே கூறியது போல லுக்கேமியா எலும்புமஜ்ஜையை தாக்க கூடியது. வழக்கத்தை விட குறைவான சிவப்பு இரத்த அணுக்கள் இருக்கும்போது ஆக்சிஜன் பற்றாக்குறையால் உங்களுக்கு அனிமியா ஏற்படலாம்.

இரவு நேரத்தில் வியர்வை வருவது மாதவிடாய், சர்க்கரை அளவு குறைதல், ஆகிசிஜன் பற்றாக்குறை போன்றவற்றால் இருக்கலாம். ஆனால் இது லுக்கேமியாவின் ஆரம்பகால அறிகுறியாகவும் இருக்கலாம். மற்ற அறிகுறிகளுடன் இரவில் வியர்க்கும் அறிகுறியும் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது.

மாதவிடாய் சுழற்சிக்கு இடையில் இரத்தப்போக்கு ஏற்படுவதை நீங்கள் உணர்ந்தால் அதனை அலட்சியமாக எண்ண வேண்டாம். மாதவிடாய் இல்லாத காலத்தில் இரத்தப்போக்கு ஏற்படுவது இதன் முக்கிய அறிகுறியாகும்.

உங்கள் சருமம் மிகவும் மென்மையாக மாறிவிட்டாலோ சிறிய உறைவிற்கே இரத்தக்கசிவு ஏற்பட்டாலோ உங்களுக்கு லுக்கேமியா ஏற்பட வாய்ப்புகள் அதிகரித்துவிட்டது என அர்த்தம். ஈறுகளில் இத்தக்கசிவு, மூக்கில் இரத்தம் கசிதல் போன்றவையும் லுக்கேமியாவின் அறிகுறிகள்தான். சிலருக்கு உடலில் சிவப்பு நிற சிறிய புள்ளிகள் இருக்கும் அவற்றில் இருந்து இரத்தம் கசியும்.

பெண்களுக்கு மிகவும் மகிழ்ச்சியான செய்தி எடை குறைவு. ஆனால் சிலசமயங்களில் அது மகிழ்ச்சியான செய்தியாக இருக்காது. காரணமின்றி உடல் எடை குறைவது லுக்கேமியா அல்லது வேறுவகையான புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம். இந்த எடை இழப்பு லுக்கேமியாவால் உங்கள் உடலில் ஏற்படும் அழுத்தம் உடலின் அதிக ஆற்றலை உறிஞ்சுக்கொள்வதால் ஏற்படுவதாகும்.

லுகேமியாவில் பலவகைகள் உள்ளது. ஒவ்வொரு வகைக்கும் ஒரு சிகிச்சைமுறை உள்ளது. லுக்கேமியாவை ஆரம்ப கட்டத்தில் கண்டறிவது மிகவும் கடினம் காரணம் இதன் அறிகுறிகள்தான். இதற்கான முதன்மை சிகிச்சை முறை கீமோதெரபி தான். இதுதவிர வேறுசில சிகிச்சை முறைகளும் உள்ளது. அவைமுறையே, டார்கெட்டேட் தெரபி, இனபெர்டான் தெரபி, ரேடியேஷன் தெரபி மற்றும் ஸ்டெம் செல் மாற்று அறுவைசிகிச்சை.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleகுடும்பமே உயிரிழந்த சோகம்? ஒட்டு மொத்த சந்தோஷத்தையும் பறித்த வாழை இலை! நடந்தது என்ன?
Next articleசர்க்கரை நோயுள்ளவர்கள் இந்த பழங்களை தாராளமாக சாப்பிடலாம்!