அந்தரங்கப் படங்களை வெளியிடுவதாக மிரட்டி இளம்பெண்களிடம் பணம் பறித்த இளைஞரை பொலிசார் கைது செய்துள்ள சம்பவம் மராட்டிய மாநிலத்தில் இடம்பெற்றுள்ளது.
தானேயை சேர்ந்த 17 வயது கல்லூரி மாணவிக்கு நைகாவ் பகுதியை சேர்ந்த 20 வயது இளைஞரின் அறிமுகம் கிடைத்துள்ளது.
இதனைத் தொடர்ந்து நட்பாக பழகிய அவர்களிடையே காதல் புகுந்துள்ளது.
அந்த இளைஞர் கல்லூரி மாணவியை காதலிப்பதாகவும், காதலை ஏற்கவில்லையென்றால் தற்கொலை செய்துவிடுவேன் என மிரட்டியுள்ளார்.
இதனால் மாணவி அவரது காதல் வலையில் விழுந்தார். இதையடுத்து 2 பேரும் நெருக்கமாக பழகி வந்தனர்.
இந்நிலையில் இளைஞர் கல்லூரி மாணவியிடம் அவரது அந்தரங்க படங்களையும் கேட்டுள்ளார். அவரும் காதலன் தானே கேட்கிறார் என படங்களை அனுப்பி உள்ளார்.
ஆனால் மிக விரைவிலேயே மாணவிக்கு அந்த இளைஞரின் சுயரூபம் தெரிந்தது. குறித்த இளைஞர் மாணவியிடம் பணம் கேட்டு தொல்லை கொடுக்க ஆரம்பித்துவிட்டார்.
பணம் தரவில்லையென்றால் ஆபாச படங்களை சமூக வலைதளத்தில் பரப்பிவிடுவேன் என குறித்த மாணவியை மிரட்டியுள்ளார். இதற்குப் பயந்து சில ஆயிரங்களைக் கொடுத்த வந்த குறித்த மாணவியிடம் அந்த இளைஞர் திடீரென மிகப்பெரிய தொகையை கேட்டுள்ளார்.
மாணவியால் அந்த பணத்தை கொடுக்க முடியவில்லை. இளைஞரை எண்ணி அச்சமடைந்து மாணவி கல்லூரிக்கு செல்லாமல் வீட்டில் முடங்கினார். மாணவியின் நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டதை அவதானித்த பெற்றோர் இதுகுறித்து கேட்டுள்ளனர்.
அப்போது அவர் தனக்கு நடந்த அவலம் குறித்து கூறினார். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் சம்பவம் குறித்து பொலிசில் புகார் அளித்தனர். இதன்பேரில் பொலிசார் வழக்குப்பதிவு செய்து கல்லூரி மாணவியிடம் பணம் பறித்து வந்த இளைஞரை கைது செய்தனர்.
மேலும் அவரிடம் இருந்து செல்போனும் பறிமுதல் செய்யப்பட்டது. அப்போது அவரது செல்போனில் நடத்தப்பட்ட சோதனையில், மேலும் பல இளம் பெண்களின் ஆபாச படங்கள் இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது.
பொலிசார் மேற்கொண்ட விசாரணையில், அவர் இளம்பெண்களை முதலில் காதல் வலையில் சிக்க வைத்து அவர்களிடம் இருந்து ஆபாச படத்தை பெற்று கொள்வார்.
பின் அதை வைத்து மிரட்டி அவர்களிடம் பணம் பறித்து உண்மை தெரியவந்துள்ளது.




