பெண்கள் தங்கள் அழகுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க கூடியவர்கள். இப்பொழுது எல்லாம் அவர்களின் அழகை மெருகேற்ற ஏராளமான அழகு சாதனப் பொருட்கள் கடைகளில் கிடைக்கின்றன. இவற்றையெல்லாம் அவர்கள் வாங்குவதோடு நிறைய பேர் அதை பிரிட்ஜில் வைத்து பயன்படுத்தும் பழக்கமும் கொண்டுள்ளார்கள். இப்படி பிரிட்ஜில் அழகு சாதனப் பொருட்களை வைப்பது சரியா?
சில நேரங்களில் நாம் உபயோகிக்கும் எண்ணெய்கள், பேஸ் பேக், மாய்ஸ்சரைசர் க்ரீம், பேஸ் மாஸ்க் கலவை எல்லாத்தையும் ஒரு வாரம் வரை வைத்து பயன்படுத்துவார்கள். இதில் வேலை மிச்சம், நேரம் மிச்சம் என்பது அவர்களின் கருத்து.
ஆனால் உண்மையில் இது தவறு என்றே பியூட்டி எக்ஸ்பட்டிகள் கூறுகிறார்கள். அதன்படி அவர்கள் எந்தெந்த பொருட்களை பிரிட்ஜில் வைக்க கூடாது என்பதற்கும் பட்டியல் செய்துள்ளனர். வாங்க பார்க்கலாம்.
எண்ணெய்
கண்டிப்பாக நீங்கள் அழகுக்காக பயன்படுத்தும் எஸன்ஷியல் ஆயிலை பிரிட்ஜில் வைக்காதீர்கள். ஏனெனில் அதிக குளிர் அதன் தன்மையை மாற்றக் கூடும். கடினமாகி, அதன் இயற்கை குணத்தை இழக்க நேரிடும். உறைந்த எண்ணெய்யை சூடேற்றி பயன்படுத்தும் போது அதன் குணம் ஆவியாகி விடும். அப்புறம் அந்த எண்ணெய்யை பயன்படுத்துவதில் ஒரு பயனும் கிடையாது என்கிறார்கள் பியூட்டி எக்ஸ்பட்டிகள்.
கண் க்ரீம் மற்றும் ஜெல்
நிறைய பெண்கள் தாங்கள் போடும் ஐ க்ரீம், ஜெல் சீக்கிரம் அழிந்து விடக் கூடாது என்பதற்காக பிரிட்ஜில் வைத்து உபயோகப்படுத்துவார்கள். ஆனால் நீங்கள் குளிர்ந்த ஐ க்ரீமை கண்களில் அப்ளே செய்யும் இரத்த ஓட்டம் தடைபட்டு கண்கள் வீங்கின மாதிரி காணப்படும். எனவே ஐ க்ரீமை பிரிட்ஜில் வைக்காதீர்கள்.
ஐ பென்சில் அல்லது லிப் லைனர்ஸ்
நிறைய பேர்கள் போட்ட ஐ மேக்கப் கலைய கூடாது என்பதற்காக ஐ பென்சிலை பிரிட்ஜில் வைத்து பயன்படுத்துவர். இப்படி வைக்கும் போது அதன் முனைகள் கடினமாகி கண்களுக்குள் போடும் போது பாதிப்பை ஏற்படுத்த கூடும்.
ஆர்கானிக் அழகு சாதனப் பொருட்கள்
இயற்கையாக வீட்டில் தயாரிக்கப்படும் பேஸ் பேக்குகள், பேஸ் க்ரீம், பேஸ் மாஸ்க் போன்றவற்றை பிரிட்ஜில் வைத்து ஒரு வாரம் வரை பயன்படுத்துவோம். ஆனால் இப்படி செய்வது தவறு. ஏனெனில் அதில் உபயோகிக்கும் பழங்கள் போன்றவை கெட்டுப் போகலாம். அதன் குணங்கள் மாறலாம். எனவே அதன் காலாவதி தேதியை அறிவது நல்லது. எப்பொழுதும் ப்ரஷ்ஷாக தயாரித்து பயன்படுத்துவது நல்லது.
லிப் ஸ்டிக்
லிப்ஸ்டிக்கை ஒரு போதும் பிரிட்ஜில் வைத்து விடாதீர்கள். ஏனெனில் அதன் குளிரால் அதில் சேர்க்கப்பட்ட பொருட்கள் அனைத்தும் தனியாக பிரிந்து அதன் இயற்கை குணத்தை இழந்து விடும். இந்த உறைந்த லிப்ஸ்டிக்கை உதட்டில் அப்ளே செய்தாலும் வறண்ட வெடிபுற்ற தோற்றத்தை காட்டும். வேண்டும் என்றால் உடைந்த லிப்ஸ்டிக்கை உருக்கி சில நிமிடங்கள் பிரிட்ஜில் வைத்து கொண்டு பயன்படுத்தலாம்.
பேஷியல் மிஸ்ட்
பேஷியல் ஸ்பிரேயை பிரிட்ஜில் வைத்து பயன்படுத்தும் போது அதன் குளிர்ந்த தன்மை உங்களுக்கு புத்துணர்ச்சியை கொடுக்கும். ஆனால் இப்படி குளிர்ந்த ஸ்பிரேயை உங்கள் முகத்தில் அடிக்கும் போது சருமத்தை வறட்சியாக்கி பொலிவிழந்த முகத்தை காட்டும்.
சன் ஸ்க்ரீன்
கோடை காலங்களில் பயன்படுத்தும் சன்ஸ்க்ரீன் லோசனை பிரிட்ஜில் வைத்துக் கொள்கிறார்கள். ஆனால் இந்த செயல் அதன் SPF தன்மையை குறைத்து விடும். சூரியனிடமிருந்து சருமத்தை காக்கும் ஆற்றல் குறையும். எனவே நிறைய வாங்கி பிரிட்ஜில் அடுக்கி வைக்காதீர்கள்.
நெயில் பாலிஷ்
நிறைய வேலைக்கு போகும் பெண்கள் நெயில் பாலிஷ்னின் ஆயுளை நீட்டிக்க பிரிட்ஜில் ஸ்டோர் செய்து வைத்துக் கொள்கிறார்கள். ஆனால் அப்படி நீங்கள் வைக்கும் போது நெயில் பாலிஷ்னின் பிசுபிசுப்பு தன்மை குறைந்து விடும். உறைந்த நெயில் பாலிஷயை சூடுபடுத்தினால் எரியக் கூடியது. எனவே இந்த மாதிரியான செயல்களை செய்யாதீர்கள் என்று அழகுத்துறை நிபுணர்கள் கூறுகிறார்கள்.
எனவே முதலில் இந்த மாதிரியான அழகு சாதனப் பொருட்களை பிரிட்ஜில் வைப்பதை தவிருங்கள். தேவைக்கு அதிகமாக வாங்குவதை நிறுத்தி ப்ரஷ்ஷாக உபயோகித்து வாருங்கள். கண்டிப்பாக அதன் இயற்கை குணம் நீடிக்கும்.