பெண்களின் கர்ப்பப்பையில் ஏற்படும் புற்றுநோயை தடுப்பது எப்படி?

0
1054

பெண்களை மட்டும் தாக்கக்கூடிய சில கொடிய நோய்கள் உள்ளது. அதில் முக்கியமான ஒன்றுதான் செர்விகள் கேன்சர் எனப்படும் கர்ப்பப்பை வாய் புற்றுநோய். இது பல ஆண்டுகளாக அறிகுறியே இல்லாமல் பெண்களின் உடலில் வளரக்கூடியது. 20 வயதிலிருந்து 70 வயது வரை உள்ள எந்த பெண்ணுக்கு வேண்டுமானாலும் இந்த நோய் தாக்கும் வாய்ப்புள்ளது.

பெரும்பாலும் 35 வயதை கடந்த பெண்களுக்குத்தான் இந்த நோய் ஏற்படும். சில பெண்களுக்கு மட்டும் 25 வயதிலே ஏற்பட வாய்ப்புள்ளது. அது அவர்களின் பழக்கவழக்கங்கள் பொறுத்தது. இதனை கண்டறிவது கடினம்தான் என்றாலும் சில அறிகுறிகளை வைத்து கர்ப்பப்பை வாய் புற்றுநோயை கண்டறியலாம். இந்த பதிவில் கர்ப்பப்பை வாய் புற்றுநோயின் அறிகுறிகள், காரணங்கள் மற்றும் சிகிச்சை முறைகளை பற்றி பார்க்கலாம்.

கர்ப்பப்பை வாய் புற்றுநோயானது ஹியூமன் பாபிலோமா வைரஸ்(HPV) என்னும் வைரஸால் பரவுகிறது. இது பெரும்பாலும் உடலுறவு மூலமே பரவுகிறது. இந்த நோய் தாக்கிய 80 சதவீத பெண்களுக்கு இது உடலுறவு மூலமே பரவியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மொத்தம் 100 வகையான HPV வைரஸ் தொற்றுகள் உள்ளது. ஆனால் அதில் 40 மட்டுமே கர்ப்பப்பை வாய் புற்றுநோயை உண்டாக்குகிறது. பல பெண்களுக்கு தங்களுக்கு இந்த பாதிப்பு இருக்கிறது என்பது தெரியாமல் இருப்பதே இதன் பேராபத்தாகும்.

பாலியல் உறவில் ஈடுபடாத பெண்களுக்கு இந்த நோய் தாக்கும் வாய்ப்பு மிகமிக குறைவு. இளம்வயதிலியே அதிக பாலுறவில் ஈடுபடும் பெண்களுக்கு இந்த நோய் ஏற்படும் வாய்ப்புகள் மிக அதிகம். பலபேருடன் தொடர்பு உள்ளவர்களுக்கும் இந்த நோய் தாக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளது.

பெண்கள் புகைப்பிடிப்பது அவர்களுக்கு செர்விகள் புற்றுநோய் ஏற்பட முக்கிய காரணமாக உள்ளது. இது அவர்கள் புகைக்கும் சிகரெட்டின் எண்ணிக்கை மற்றும் புகைக்கும் காலம் இவற்றை பொறுத்து மாறுபடுகிறது.

எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு இந்த நோய் தாக்கும் வாய்ப்புகள் அதிகம். ஏனெனில் அவர்களின் நோயெதிர்ப்பு மண்டலம் மிகவும் பலவீனமாக இருக்கும். அதேபோல நோயெதிர்ப்பு மண்டலம் பலவீனமாக உள்ள பெண்கள் எளிதில் இந்த நோயால் பாதிக்கப்படுவீர்கள்.

17 வயதிற்கு முன்னரே தாயாகும் பெண்களுக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தாக்கும் ஆபத்துக்கள் அதிகம். 23 வயதிற்கு மேல் தாயாகும் பெண்களுக்கு இந்த ஆபத்தின் விகிதம் குறைவு.

இந்த நோயை ஆரம்ப கட்டத்திலியே கண்டறிவது என்பது முடியாத ஒன்று. ஆனால் இதனை எளிதில் கண்டறிய கூடிய ஒரே அறிகுறி அசாதாரண இரத்தப்போக்குதான். இந்த இரத்தப்போக்கு பாலியல் உறவின் போதோ அல்லது மாதவிடாய்க்கு பிறகோ ஏற்படலாம். இதன் மற்ற அறிகுறிகள் யாதெனில் இடுப்பு பகுதியில் வலி, அதிக சோர்வு, கால்களில் வீக்கம், கீழ்முதுகு வலி போன்றவை ஆகும்.

கருப்பை வாய் புற்றுநோயை கண்டறிய பல சோதனைகள் உள்ளது. அதில் முதல் சோதனை பெல்விக் எக்ஸ்பென்ஷன் எனப்படும் இடுப்பு சோதனை ஆகும். இதனை ஒரு பெண் மருத்துவரே செய்யலாம். இந்த சோதனை முடிந்ததும் கால்போஸ்கொப்பி மற்றும் எலும்பு பயோப்சி போன்ற சோதனைகள் மகப்பேறு மருத்துவர் மூலம் செய்யப்பட வேண்டும்.

கர்ப்பப்பை வாய் புற்றுநோய்க்கு அறுவைசிகிச்சை, ரேடியோதெரபிய, கீமோதெரபி என பல சிகிச்சைகள் உள்ளது. புற்றுநோயின் நிலை மற்றும் நோயாளியின் ஆரோக்கியம் ஆகியவற்றை பொறுத்து சிகிச்சை முறை தேர்வுசெய்யப்படும். இதனை ஆரம்பக்கட்டத்திலேயே குணப்படுத்துவது நல்ல பலனை அளிக்கும்.

அறுவைசிகிச்சை தான் ஆரம்ப நிலை புற்றுநோய்க்கு சிறந்த சிகிச்சை முறையாகும். இது புற்றுநோய் கர்ப்பப்பைக்குள் இருப்பது உறுதிசெய்யபட்ட பின் செய்யப்டுவது. ஒருவேளை இந்த முறையில் புற்றுநோய் குணமாகவில்லை எனில் மேற்கொண்டு ரேடியோதெரபி முறையை கையாளலாம்.

ரேடியோதெரபி என்பது ரேடியேஷன் தெரபி என்றும் அழைக்கப்படுகிறது. இது X கதிர்களை கொண்டு புற்றுநோய் செல்களை அழிக்கும் முறையாகும். இது பெண்களின் இடுப்பு பகுதியை சுற்றி செய்யப்படுவதால் இதில் சில பக்கவிளைவுகளும் இருக்கிறது. அவை முறையே வயிற்றுப்போக்கு, குமட்டல், சிறுநீர்ப்பையில் எரிச்சல், மாதவிடாயில் பிரச்சினை, முன்கூட்டியே மாதவிடாய் ஏற்படுதல் போன்றவையாகும்.

இது வேதியியல் சேர்மங்களை பயன்படுத்தி புற்றுநோயை குணப்படுத்தும் முறையாகும். மற்ற இரண்டு முறைகளிலும் புற்றுநோய் செல்கள் அழிக்கப்படாத பட்சத்தில் கீமோதெரபிதான் இதற்கு சிறந்த முறையாகும். ஆனால் இதிலும் சில பக்க விளைவுகள் உள்ளது. வயிற்றுப்போக்கு, முடி உதிர்வு, சோர்வு, கருத்தரிக்க இயலாமல் போகுதல் போன்ற பிரச்சினைகள் உள்ளது.

இதனை தடுக்கும் முக்கியமான வழி யாதெனில் தொடர்ச்சியான கருப்பை சோதனைதான். கருப்பையில் ஏற்படும் சிறிய மாற்றமாக இருந்தாலும் உடனடியாக அதனை மறுத்தவைதாம் சென்று சோதனை செய்துகொள்ள வேண்டும்.

HPV தடுப்பூசி 9 முதல் 27 வயது வரை உள்ள ஆண், பெண் இருவருக்குமே பரிந்துரைக்கப்படுகிறது.

இது கர்ப்பப்பை வாய் புற்றுநோயை தடுக்க மிகசிறந்த வழியாகும்.

மிகச்சிறிய வயதில் பாலுறவில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும், அதே நேரம் பாலுறவின் போது பாதுகாப்பாக இருப்பதை உறுதிசெய்து கொள்ளவேண்டும்.

புகைப்பிடித்தலை நிறுத்துவது உங்களை புற்றுநோயிலிருந்து பாதுகாக்க சரியான வழியாகும். புற்றுநோய் பாதுகாப்பு மட்டுமின்றி புகைபிடிப்பதை நிறுத்துவது பல ஆரோக்கிய நன்மைகளை வழங்கும்.

Previous articleஇலங்கைக்கு படையெடுக்கும் கனடா – பிரித்தானியா மக்கள்! கொழும்பில் மூடப்படும் அதிசொகுசு ஹொட்டல்கள்
Next articleயாழ்ப்பாணத்திலிருந்து குறைந்த கட்டணத்தில் இந்தியா செல்லலாம் !