கிளிநொச்சி பூநகரி நல்லூர் பகுதியில் ஏற்பட்ட விபத்தில் மோட்டார் சைக்கிளில் சென்றவர் பலியாகியுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பூநகரி நல்லூர் வீதியில் இன்று மாலை 6.00 மணியளவில் மோட்டர் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தவர் மீது தென்னிலங்கையைச் சேர்ந்த அபிவிருத்தி லொத்தர் சபைக்குச் சொந்தமான கனரக வாகனம் ஒன்று மிகவேகமாக வந்து மோதியது.
அந்த வாகனத்தின் அடிப்பகுதியில் மோட்டார் சைக்கிளும் மோட்டார் சைக்கிளில் சென்றவரும் அகப்பட்டு கடுமையான காயங்களுக்குள்ளாகி சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார்.
மோட்டார் சைக்கிளில் சென்றவர் யார் என இனங்காணப்படவில்லை. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிசார் முன்னெடுத்துள்ளனர்.
மேற்படி வீதியில் மோட்டார் சைக்கிளில் சென்றவரும் அபிவிருத்தி லொத்தர் சபைக்குச் சொந்தமான கனரக வாகனமும் மிகவேகமாகச் சென்றதாக அவதானித்தவர்களால் கூறப்படுகின்றது.
இதே வேளை வாகனம் செலுத்தியவர்கள் மதுபோதையில் இருந்திருக்கலாம் என்ற சந்தேசமும் வெளியிடப்படுகின்றது.
கிளிநொச்சி மாவட்டத்தின் பல பகுதிகளிலுள்ள வீதிகளில் வாகனங்களை சாரதிகள் வீதி விதிமுறைகளை மீறி அதிக வேகத்தில் செலுத்தி வருவதாகக் கூறிக்கவலை தெரிவிக்கப்படுகின்றது.








