புலம்பெயர்ந்தவர்கள் பயணித்த படகு மூழ்கியது! 50 பேர் உயிரிழப்பு!

0

மத்திய தரைக்கடல் பகுதியில் புலம்பெயர்ந்த துனிசியர்கள் பயணித்தப் படகு மூழ்கியதில் 50 பேர் மூழ்கி உயிரிழந்தனர். இதுவரை 68 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.

துனிசியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து பொதுமக்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு படகுகளில் சட்ட விரோத முறையில் புலம்பெயர்வது வழக்கம். ஆபத்தான மத்திய தரை கடல் பகுதியை இவர்கள் பெரும்பாலும் பயன்படுத்தி வந்தனர். இவர்களது படகுகள் அடிக்கடி விபத்துகளில் சிக்கி கவிழ்வது வாடிக்கையாக உள்ளது.

இந்த நிலையில், 30 அடி நீள படகு ஒன்றில் 180 க்கும் மேற்பட்டோர் ஐரோப்பிய நாடுகளுக்கு செல்வதற்காக மத்திய தரைக்கடல் வழியே பயணம் செய்துள்ளனர். படகிற்குள் திடீரென நீர் கசிந்து உட்புகுந்ததில் படகு கடலில் மூழ்கியது.

இதுபற்றிய தகவல் கிடைத்து கடலோர படை மற்றும் கப்பற்படையினர் மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். இந்தச் சம்பவத்தில் 50 பேர் வரை உயிரிழந்தனர். 68 பேர் உயிருடன் மீட்கப்பட்டு உள்ளனர்.

துனிசிய நாட்டின் தென்கடலோர பகுதியில் இருந்து இதுவரை 47 உடல்கள் மீட்கப்பட்டு உள்ளன. ராணுவ வானூர்தி உதவியுடன் மீட்புப்பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

ஏற்கனவே கடந்த பெப்ரவரி மாதம் புலம்பெயர்ந்து சென்றவர்களின் படகு மத்திய தரைக்கடல் பகுதியில் விபத்துக்குள்ளாகியதில் 90 பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleயாழ் பொலிஸ் நிலை­யத்தில் தடுத்து வைக்­கப்­பட்­டுள்­ள நாய்! காரணம் என்ன தெரியுமா??
Next articleஇலங்கையில் கை துண்டமான பல்கலைக்கழக மாணவன் தொடர்பில் வெளியான சோகச் செய்தி!