புலம்பெயர்ந்தவர்களுக்கு சிறிலங்கா அரசாங்கத்தின் மகிழ்ச்சிச் செய்தி!

0

இலங்கையிலிருந்து புலம்பெயர் நாடுகளில் வாழ்பவர்களுக்கு மகிழ்ச்சியான தகவல் ஒன்றை ஸ்ரீ லங்கா அரசாங்கம் வெளியிட்டுள்ளது.

இதன்படி இரட்டை பிரஜாவுரிமை வழங்காத நாடுகளில் இலங்கை குடியுரிமையை இழந்து வாழ்பவர்களுக்கு விசேட வீசா ஒன்றை அறிமுகப்படுத்திவைக்கும் நடவடிக்கையினை இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் உறுதி செய்துள்ளது.

ஜப்பான், இந்தியா உட்பட பல நாடுகளில் இலங்கைக் குடியுரிமையை இழந்தவர்களுக்கு இந்த விசேட சந்தர்ப்பம் வழங்கப்படவுள்ளது.

நீண்ட காலமாக இந்த நடவடிக்கை உறுதி செய்யப்படாமல் இருந்த நிலையில் தற்போது இதனை துறைசார் அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.

நாட்டின் அபிவிருத்திச் செயற்பாடுகளுக்கு உதவி பெற்றுக் கொள்ளும் நோக்கில் விசேட திறமை மற்றும் முதலீட்டு திறன் உள்ள இலங்கையர்களுக்காக இந்த விசா வெளியிட எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த விசா அனுமதிப் பத்திரம் ஊடாக நீண்ட காலங்கள் இலங்கையில் தங்கியிருப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படவுள்ளது.

இதேவேளை இந்த நடவடிக்கையினை அமுல்ப்படுத்துவதற்கு இன்னும் மூன்று மாதங்களாகும் என கூறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleயாழில் இருந்த சாத்திரக்காரர்களை கைது செய்து விமான நிலையத்திற்கு அழைத்துச் சென்ற அதிகாரிகள்!
Next articleநன்மை செய்யும் நான்காம் எண்!