ரெட் பீன்ஸ் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? சிகப்பு காராமணி என்றும் கிட்னி பீன்ஸ் என்றும் இதனை அழைக்கிறார்கள். இதற்கென்ற தனி சுவையை கொண்டிருக்கும் இந்த வகை பீன்ஸ் கிட்னி வடிவத்தில் இருக்கும்.
இதில் பொட்டாசியம்,மெக்னீசியம்,இரும்பு மற்றும் ப்ரோட்டீன் நிறைந்திருக்கிறது.சைவ உணவு சாப்பிடுபவர்களுக்கான சிறந்த மாற்று உணவு இது. அதோடு இது பல்வேறு தொற்றுகளை எதிர்த்து போராடிடும் ஆற்றலையும் கொண்டது.இதைத் தாண்டி இந்த ரெட் பீன்ஸ் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் நமக்கு கிடைக்கிறது என்பதை பார்க்கலாம்.
இன்று உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் ஓரு நோய் புற்றுநோய் என்றே சொல்லலாம்.இதில் மக்னீசியம் நிறைந்திருக்கிறது இது சிறந்த ஆண்ட்டி ஆக்ஸிடண்டாக செயல்பட்டு நம் உடலில் இருக்கும் செல்களை பாதுகாக்கிறது. இதில் விட்டமின் கேவும் இருப்பதால் ஆக்ஸிடேடிவ் ஸ்டரஸிலிருந்தும் இது நம்மை காப்பாற்றுகிறது.
நம் மூளையின் செயல்பாடுகளும் நரம்புகளுக்கும் விட்டமின் கே மிகவும் அவசியமான ஒன்றாகும். ஸ்பிங்கோ லிப்பிட்ஸ் முறையாக உருவாவதற்கு இந்த ரெட் பீன்ஸ் உதவுகிறது.
அதோடு இதில் அதிகப்படியாக தையமைன் இருப்பதால் அவை மூளையின் செல்கள் சுறுசுறுப்பாக பணியாற்ற உதவிடுகிறது. acetylcholine உற்பத்தி செய்து நினைவுத் திறனையும் அதிகரிக்கிறது.
ரெட் பீன்ஸில் கரையக்கூடிய நார்ச்சத்து அதிகமிருக்கிறது. இது கார்போஹைட்ரேட்டின் மெட்டபாலிசத்தை குறைக்க பெரிதும் உதவிடுகிறது.
உணவு சாப்பிட்ட உடனேயே ரத்தச் சர்க்கரையளவு கூடுவதை இது தடுக்கிறது. அதோடு இதில் கணிசமான அளவு ப்ரோட்டீனும் இருப்பதால் அவை ரத்தச் சர்க்கரையளவை கட்டுக்குள் வைத்திருக்க உதவிடுகிறது.
ரெட் பீன்ஸ் விரைவில் செரிமானம் ஆகிடும். இதில் இருக்கும் சத்துக்கள் செரிமானத்திற்கு தேவையான நல்ல பாக்டீரியா உற்பத்திக்கு பெரிதும் உதவுகின்றன. அதோடு உடலில் சேரக்கூடிய நச்சுக்களையும் சீக்கிரமே வெளியேற வைக்கிறது. இதனால் பிற நோய்கள் எதுவும் ஏற்படாமலும் நம்மை பாதுகாக்கிறது.
இதில் அதிக நார்ச்சத்து இருப்பதால் நம் உடலில் கொலஸ்ட்ரால் அளவை கட்டுக்குள் வைக்க உதவிடுகிறது.இதிலிருக்கும் ஃபோலேட் என்ற சத்து நம் உடலில் homocysteine உற்பத்தியை குறைக்கிறது.
இதனால் பக்கவாதம், மாரடைப்பு மற்றும் இதயம் தொடர்பான பிரச்சனைகளிலிருந்து நம்மை தற்காத்துக் கொள்ள முடிகிறது.அதோடு கார்டியோவஸ்குலர் சிஸ்டம் முறையாக வேலை செய்ய உதவிடுகிறது.
சிகப்பு பீன்ஸிலிருந்து அதிகப்படியாக இரும்புச்சத்து நமக்கு கிடைக்கிறது. உடலின் மெட்டபாலிசம் சிறப்பாக இருக்கவும், நம்முடைய எனர்ஜிக்கும் இது கண்டிப்பாகத் தேவை.இதிலிருக்கும் மக்னீசியம் கூட நாம் உற்சாகமாக இருக்க உதவிடுகிறது.
ரெட் பீன்ஸில் இருக்கக்கூடிய மக்னீசியம் மற்றும் கால்சியம் கண்டண்ட் எலும்புகளின் உறுதித்தன்மைக்கு உத்திரவாதம் அளிக்கிறது.அதோடு எலும்புத் தேய்மானம் நோய் ஏற்படாமலும் நம்மை பாதுகாக்கிறது.இதிலிருக்கும் ஃபோலேட் எலும்புகளை வலுவாக்கிறது.
அதோடு இதில் ப்ரோட்டீன் அதிகமிருப்பதால் அசைவ உணவு சாப்பிடாதவர்கள்,அசைவத்திற்கு மாற்றாக இதனை எடுத்துக் கொள்ளலாம். அதோடு டயட் என்ற பெயரில் பால் மற்றும் பால் சார்ந்த பொருட்களை தவிர்ப்பவகளும் இதனை உங்கள் உணவில் சேர்க்கலாம் சிறந்த மாற்றாக இருக்கும்.
ரெட் பீன்ஸில் குறைந்த க்ளைசீமிக் இண்டெக்ஸுடன் கூடிய கார்போஹைட்ரேட் இருக்கிறது.இது சர்க்கரை நோயை கட்டுக்குள் வைத்திருக்க உதவிடும்.
இதிலிருக்கும் Fibernya ஒரு வகை அமிலத்தை உருவாக்கும். இது கல்லீரலில் கொலஸ்ட்ரால் படிவதை தடுத்திடும். இதனால் கெட்ட கொழுப்பு சேர்வதையும் தடுக்கலாம்.
மக்னீசியம் நிறைந்த இதனை எடுத்துக்கொள்வதால் bronchio-dilating என்ற எஃபக்ட் நமக்கு கிடைக்கிறது.இது ஆஸ்துமாவின் தீவிரத்தை குறைக்கும். நம் உடலில் மக்னீசியம் சத்து குறைந்திருந்தால் ஆஸ்துமா பாதிப்பு ஏற்படும்.
அதோடு இது சோர்விலிருந்தும் நம்மை மீட்கிறது.